சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளிக்கு மிரட்டல்: தம்பி கைது; அண்ணனுக்கு வலை

Added : செப் 22, 2019
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, சிகரெட் வாங்கி வரச்சொல்லி தகராறில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர். ராசிபுரம் அடுத்த, மலையாம்பாளையம் பி.மேட்டூரை சேர்ந்தவர் ராஜா, 32; கூலித் தொழிலாளி. இவரது, 14 வயது மகன், 10ம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன், வீட்டில் இருந்த சிறுவன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆனந்த், 20, அவரது, 16 வயது சகோதரர், சிறுவனிடம் சிகரெட் வாங்கிதரச்சொல்லி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. வீட்டிற்கு வந்த சிறுவன், நடந்தது குறித்து ராஜாவிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்குள் வீட்டிற்கு கட்டை, கம்பு, இரும்பு ராடுடன் வந்த சகோதரர்கள் இருவரும், ராஜாவை தகாத வார்த்தையால் திட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததும் தப்பினர். புகார்படி, ராசிபுரம் போலீசார், வழக்கு பதிந்து, 16 வயது சிறுவனை கைது செய்தனர். ஆனந்தை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X