வந்தே மாதரத்திற்கு எதிர்ப்பு: மத்திய அமைச்சர் கடுப்பு

Updated : செப் 22, 2019 | Added : செப் 22, 2019 | கருத்துகள் (60)
Advertisement
Vande Mataram,India, Pratap Sarangi, பிரதாப் சாரங்கி, வந்தே மாதரம்

புவனேஸ்வர்: வந்தே மாதரம் பாடலை ஏற்காதவர்கள், இந்தியாவில் வாழ்வதற்கு தகுதி அற்றவர்கள் என மத்திய இணைஅமைச்சர் பிரதாப் சாரங்கி கூறியுள்ளார்.

புவனேஸ்வர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கால்நடை நலத்துறை, சிறுகுறு நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி பேசுகையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மோடி அரசு நீக்கியதை வலுவான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சியாச்சின் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரசிடம் தெளிவாக கூறியுள்ளார்.




72 ஆண்டுகளுக்கு பிறகு, காஷ்மீர் மக்களுக்கான முழு உரிமையையும், மோடி தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. தற்போது, அந்த மாநிலத்தில் முழு அமைதி நிலவி வருகிறது. காஷ்மீரில் நிலம் வாங்குவது துவங்கியுள்ளன. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை உலக நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. ஆனால், சில கும்பல் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்கள், சிறப்பு சட்டம் நீக்கத்தால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சிறப்பு சட்டம் நீக்கத்திற்கு பின்னர், மனித உரிமை மீறப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், தாக்குதலில் உயிரிழந்த போது, பயங்கரவாத ஆதரவாளர்கள் அதனை பற்றி கவலைப்படவில்லை.

இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை ஏற்காதவர்கள், இந்தியாவில் வாழ தகுதியற்றவர்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் கலந்து கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATARAJA D - sivaganga,இந்தியா
04-அக்-201916:25:09 IST Report Abuse
VENKATARAJA D கஷ்மீர் பிரச்சனை காங்கிரசால் வந்தது .பி ஜே பி யால் சரியாகும் .இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை ஏற்காதவர்கள், இந்தியாவில் வாழ தகுதியற்றவர்கள்." சரியே"
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
23-செப்-201906:08:05 IST Report Abuse
Indhuindian வந்தே மாதரம் - தாயை வணங்குகிறேன். இதில் என்ன தவறு. இதை சொல்வதில் என்ன வெட்கம் இது கர்வப்படவேண்டிய சமாச்சாரம் அல்லவா? அப்படின்னா இதை எதிக்கறவங்களாம் தாயை அவமதிப்பவர்களாகவோ அல்லது உதாசீனம் செய்பவர்களாகவோதான் இருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
23-செப்-201905:16:24 IST Report Abuse
oce பகுத்தறிவுகள் இந்த தேசபக்தி பாடலை வந்து ஏமாத்தறோம் என்று மேடைகளில் சொல்லி கிண்டல் செய்திருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X