பயணிகள் இல்லாமல் சென்ற பாக்., விமானங்கள்

Updated : செப் 22, 2019 | Added : செப் 22, 2019 | கருத்துகள் (30)
Advertisement
Pak Airline, Flights, Passengers, விமானங்கள், பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், கடந்த 2016 - 17 ல் பயணிகள் யாரும் இன்றி விமானங்கள் இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் கடுமையான நிதி பற்றாக்குறையால் தவித்து வருகிறது. இதனால், அந்நாட்டு பொருளாதாரம் மிகவும் மோசமடைந்துள்ளது. நிலையை சமாளிக்க, வெளிநாடுகளிடம் கடன் வாங்கும் முயற்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஈடுபட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தானுக்கு எப்ஏடிஎப் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. தவறினால், கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என எச்சரித்துள்ளது.






இந்நிலையில், அந்நாட்டு மீடியாவில் வெளியான செய்தி: : கடந்த 2016- 17 ல் பாகிஸ்தான் சர்வதேச விமான (பிஐஏ) நிறுவனத்திற்கு சொந்தமான 46 விமானங்கள், பயணிகள் இல்லாமல், இஸ்லாமாபாத் நகரில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன. இதனால், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 180 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, விமான நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல் ஹஜ் யாத்ரீகர்களுக்காக இயக்கப்பட்ட 36 விமானங்களில், யாரும் பயணம் செய்யவில்லை. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - Ballary,இந்தியா
23-செப்-201913:30:14 IST Report Abuse
Arasu சீரியஸாகவே சொல்கிறேன் அந்த விமானங்களை நமக்கு உள்வாடகைக்கு குத்தகையில் விடலாம் தானே. கிங் பிசிர் மற்றும் ஜெட் போனபின்பு நமது விமான டிக்கெட் விலை ஏறிவிட்டது
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
23-செப்-201912:37:52 IST Report Abuse
சீனி உப்புமூட்டையாவது ஏத்திக்கிட்டு போய் வித்திருந்தா பயனுள்ளதா இருக்கும். போதைப்பொருள் கடத்தினரா என முழுசா உண்மையை கண்டு கண்டுபிடிக்கனும்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-செப்-201905:19:51 IST Report Abuse
 nicolethomson அவன் சும்மா போனான் என்று சொன்னால் நம்பவேண்டுமா? உள்ளே மனிதர்களை தான் அழைத்து செல்லவில்லை , ஆனால் பாகிஸ்தான் தீவிரவாத நாடு , உலகின் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்துவரும் நாடு , அப்படிப்பட்ட நாட்டில் இருந்து விமானம் சும்மா போச்சா? கதை நம்புற மாதிரியா இருக்கு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X