பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Updated : செப் 22, 2019 | Added : செப் 22, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






மழை பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டிவனம், விருதநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதிகளில் தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.பள்ளிப்பட்டு - 6 செ.மீ., ஆண்டிப்பட்டி, போச்சம்பள்ளி, பென்னாகரம் பகுதிகளில் தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.




சென்னையில் கனமழை

இந்நிலையில் இன்று (செப்., 22) பிற்பகலில் சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், வள்ளூவர் கோட்டம், கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, சூளைமேடு, ஆழ்வார்பேட்டை, அயனாவரம், கீழ்பாக்கம், தேனாம்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumarkv - chennai,இந்தியா
22-செப்-201916:07:49 IST Report Abuse
kumarkv சுமாரான மழை, கனமழை இல்லை
Rate this:
Share this comment
Cancel
Nathan - Bengaluru,இந்தியா
22-செப்-201914:46:45 IST Report Abuse
Nathan ஒவ்வொரு வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை செப்பனிடுதல் இது போல் மழை பெற ஏதுவாக இருக்கும்... வறண்ட மாவட்டங்கள் உள்ளோரும் தங்கள் வீடுகளில் தவறாமல் மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்து தொடர்ந்து பராமரிப்பு செய்தல் நன்மை பயக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X