காஷ்மீரில் அமைதி: அமித்ஷா

Updated : செப் 22, 2019 | Added : செப் 22, 2019 | கருத்துகள் (12)
Advertisement
காஷ்மீர், அமைதி, ராகுல், நேரு, அமித்ஷா,

மும்பை: காஷ்மீரில் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு,அங்கு அமைதி நிலவி வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடியின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன். மத்தியில் பா.ஜ., இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பின்னர், காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்குவது என்ற முடிவை அவர் தான் எடுத்தார்.சிறப்பு சட்டம் 370வது பிரிவு அரசியல் பிரச்னை என ராகுல் சொல்கிறார். ராகுல் தற்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால், சிறப்பு சட்டம் நீக்கத்திற்காக பா.ஜ.,வினர் 3 தலைமுறைகளாக உழைத்துள்ளனர். இது அரசியல் பிரச்னை அல்ல. தேசத்தை ஒன்றாக வைப்பதற்கான எங்களது இலக்கு.




1947 ல் காஷ்மீரில், பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக, இந்திய ராணுவம் வலிமையுடன் போரிட்டு கொண்டிருந்த போது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவிக்காமல் இருந்திருந்தால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்னை வந்திருக்காது. சிறப்பு சட்டம் ரத்துக்கு பிறகு, காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. மோடி, பதவி ஏற்றபிறகு, சாத்தியம் இல்லாததை சாத்தியம் ஆக்கியுள்ளோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-செப்-201918:52:45 IST Report Abuse
Syed Ghouse Basha ஒரு பைய வெளியே வர விடலை அப்போ அமைதிதானே இருக்கும்!
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
23-செப்-201907:36:00 IST Report Abuse
ashakஎன்ன இப்படி சொல்லிடீரு?...
Rate this:
Share this comment
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
23-செப்-201913:30:03 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய்ஆஹா... கல் எறியும் தீவிரவாத கும்பலை சேர்ந்த இருவரை நான் கண்டுவிட்டேன்......
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
22-செப்-201918:33:57 IST Report Abuse
spr வன்முறை பயங்கர வாதம் இவற்றுக்கு எதிராக ஒருமுறையாவது கடுமையான நடவடிக்கை தேவையே. இங்கே தனிமனித உரிமை, மனித நேயம், கருத்து சுதந்திரம் என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை இதனைச் செய்ய அதீத துணிச்சல் தேவை எல்லோரையும் எல்லா நேரத்திலும் திருப்திப்படுத்துவது இயலாத காரியம் எந்த ஒரு முடிவும் நடவடிக்கையும் அந்தக் கணத்துக்கான தேவை காலத்தின் கட்டாயம் இது அவர்கள் தேர்தலுக்கு முன்பே அறிவித்த ஒன்றே அதனை காஷ்மீர் உட்பட இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுவே பாராளுமன்றத் தேர்வில் அவர்களின் தனிப்பட்ட அறுதி பெரும்பான்மையை உறுதி செய்து ஆட்சிப் பொறுப்பையும் அளித்திருக்கிறதுதேர்தலில் வென்றபின்னர் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மக்களே ஏற்கவில்லை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்பவர்கள் இதனையும் அப்படி ஏற்க வேண்டியதுதானே இதனைச் செய்ய முயற்சி எடுத்த மோடி அரசுக்குப் பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
22-செப்-201917:17:06 IST Report Abuse
RajanRajan ஒரு குலாம் 370 பிரிவை நீக்கினால் போர் மூளும் என கூவினான். பப்பு இன்னொரு பக்கம் குல்லா ஓட்டுக்காக கொக்கரித்தான். ஆனால் நடந்தது என்ன ? ஒரு வரலாற்று தவறு திருத்த பட்டது. கஸ்மீரை வைத்து அரசியல் பண்ணி கொண்டிருந்த பாகிஸ்தான் திவாலாகி கொண்டிருக்கிறது. உள்ளூர் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு பாதுகாப்பில் உள்ளனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவினதுமே பிணமாகிறார்கள். POK இல் இருக்கும் காஸ்மீரிகள் பாகிஸ்தானுக்கு எதிராக போராட துவங்கி விட்டார்கள். இன்னொரு பக்கம் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பலுசிஸ்தான் வந்தேமாதரம் என முழங்கி பாகிஸ்தானுக்கும் தலைவலி கொடுக்க துவங்கி விட்டது. ஆக மொத்தத்தில் இந்த பிரிவு நீக்கம் இத்தனை காலமாக ஒருசிலரால் மறைத்து வைத்து சுயலாபம் பார்த்த ஏராளமான உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது அடுத்து நம் குறி POK வை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதே. அப்போ தெரியும் அந்த சீனாவின் POK வை கடந்து செல்லும் காரகோரம் ஹைவேஸ் கதி என்னவாகும் என்று. இது பிஜேபி யின் சாதனையாக வரலாற்றில் முத்திரை பதிக்கும். ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X