ஜார்க்கண்டில் பயங்கரவாதி கைது| Dinamalar

ஜார்க்கண்டில் பயங்கரவாதி கைது

Added : செப் 22, 2019 | கருத்துகள் (3)

ராஞ்சி: கடந்த மூன்று ஆண்டுகளாக ஜார்க்கண்ட் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால், தேடப்பட்டு வந்த அல்கொய்தா பயங்கரவாதி முகமது காலிமுதின், இன்று கைது செய்யப்பட்டார். டாட்டா நகர் ரயில் நிலையத்தில், மாறுவேடத்தில் வந்த நடரை போலீசார், சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் தான் காலிமுதின் என்பது தெரியவந்தது.

இவர், இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதத்தில் ஈடுபடுத்தி வந்தவர். இந்திய இளைஞர்கள் பலரை மூளைச்சலவை செய்து பாகிஸ்தானை சேர்ந்த அமைப்பிற்காக பயங்கரவாத பயிற்சி அளித்துள்ளார். ஜாம்ஷெட்பூரை சேர்ந்த காலிமுதின், கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X