பொது செய்தி

இந்தியா

ராஜிவ்குமாரை வலைவீசி தேடும் சிபிஐ

Updated : செப் 22, 2019 | Added : செப் 22, 2019 | கருத்துகள் (45)
Advertisement
Saradha scam, CBI, IPS officer, Rajeev Kumar,private hospital, UP house, சாரதா சிட் பண்டு, ராஜிவ்கமார்,  சிபிஐ

கோல்கட்டா: தலைமறைவாக உள்ள கோல்கட்டா முன்னாள் கமிஷனர் ராஜிவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாரதா நிதி நிறுவனம், 2,500 கோடி ரூபாய் மக்கள் பணத்தை, 2014ல் மோசடி செய்தது .இந்த வழக்கில், கோல்கட்டா முன்னாள் கமிஷனர், ராஜிவ் குமார் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.அவரிடம் விசாரணை நடத்த, பலமுறை, 'சம்மன்'அனுப்பியும், விசார ணைக்கு ஆஜராகாமல் உள்ளார்.
இந்நிலையில், அவரை கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த இடைக்கால தடையை, கோல்கட்டா நீதிமன்றம், கடந்த வாரம் ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, ராஜிவ் குமாருக்கு பல முறை முறை சம்மன் அனுப்பியும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க, சி.பி.ஐ., தனிப்படை அமைத்து தேடி வருகிறது.


இந்நிலையில், தலைமறைவாகியுள்ள ராஜிவ்குமாரை, சிபிஐ அதிகாரிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தேடி வருகின்றனர். கோல்கட்டா மற்றும் அண்டை மாவட்டங்களிலும் ராஜிவ்குமாரை தேடி வருகின்றனர். ராஜிவ்குமாரின் வீட்டிற்கு சென்றனர். அவரது மனைவியிடம், ராஜிவ்குமார் இருப்பிடம் குறித்து விசாரணை நடத்தினர். குற்றப்பிரிவு விசாரணை ஏடிஜிபியான ராஜிவ்குமார் அலுவலகத்திற்கு சென்றும் விசாரணை நடத்தியதுடன், தெற்கு பராகன்ஸ் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சோதனை நடத்தினர்.

கோல்கட்டா அல்லது அண்டை மாவட்டங்களில் உள்ள ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் சொகுசு பங்களாக்களில் ஏதாவது ஒன்றில் ராஜிவ்குமார் தங்கியிருக்கலாம் எனவும், அடிக்கடி இடத்தை மாற்றும் அவர், பல மொபைல் எண்களை பயன்படுத்தி வருவதாகவும் சிபிஐ அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ராஜிவ்குமாரின் பழமையான வீடு, உ.பி.,யின் சந்தவுலி மாவட்டத்தில் உள்ளது. அங்கு, அவர் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கும் ஒரு சிபிஐ குழு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
23-செப்-201906:10:03 IST Report Abuse
Nathan அவன் எப்பவோ பரலோகம் போயிருப்பான், மம்தா உத்தரவில். அவ்வளவு ரகஸ்யம் தெரிந்தவனை விட்டு வைப்பாளா?இல்லாதவனை தேடுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
23-செப்-201904:25:46 IST Report Abuse
B.s. Pillai Another drama of P.C. will be enacted. Now, CBI should recruit sports " High Jump " winners in their role to jump over the compound wall
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
23-செப்-201903:43:37 IST Report Abuse
s t rajan மம்தா கஸ்டடியில் இரூக்கிறாரோ ... என்னவோ ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X