மதிக்கத்தக்க மோடி: சசி தரூர் கருத்து

Updated : செப் 22, 2019 | Added : செப் 22, 2019 | கருத்துகள் (38)
Share
Advertisement

புனே: இந்தியாவின் பிரதிநிதியாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பிரதமர் மரியாதைக்குரியவர் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளார்.



latest tamil news


காங்., மூத்த தலைவர் சசி தரூர், பிரதமர் மோடி தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்.


latest tamil news


மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த காங்., கூட்டத்தில் மக்களவை எம்.பி., சசி தரூர் கூறியதாவது: பிரதமர் மோடி இந்தியாவில் இருக்கும் போது, அவரிடம் கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உள்ளது. ஆனால், இந்தியாவின் பிரதிநிதியாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது பிரதமர் மோடி மதிக்கப்பட வேண்டும். பாஜ., அரசு ஹிந்தி, இந்து மதத்தை ஊக்குவித்து வருகிறது. இது நம் நாட்டிற்கு ஆபத்தானது. மும்மொழி கொள்கையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.


latest tamil news


மகாராஷ்டிராவில் பாஜ., கும்பலால் கொலைகள் நடக்கின்றன. கேரளாவில் வெவ்வேறு சமூகத்தினர் இருந்தாலும் வேறுபாடுகளின்றி மக்கள் வாழ்கின்றனர். ஆனால் மகாராஷ்டிராவில் மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது. சத்ரபதி சிவாஜி கூட தனது ஆட்சியில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களை கொண்டிருந்தார். ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இவ்வாறு சசி தரூர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-செப்-201906:48:40 IST Report Abuse
skv srinivasankrishnaveni நீ நல்லா ஆங்கிலம் பேசவே உன்னை இந்தியாவின் பிரதிநிதியாகவே நியமிச்சது கான்கிரேஸ் கடிச்சி தன் ஆட்சியே இந்த உண்மையை மறுக்கவேமுடியாது. பிறகு இந்திய வந்துட்டு அவாகட்சில் அமைச்சராகவும் இருந்தீக ஹிந்தி தெரியும் உமக்கு என்று நன்னாவே தெரியும் எங்களுக்கெல்லாம் வித் கட்டாயம் ஹிந்தி படிக்கவும் தெரிஞ்சுருக்கும் என்றும் நபரும் நீயெல்லாம் கேரளாலே படிச்சுருந்தால் ஹிந்திபடிச்சுத்தான் இருப்பீங்க. தமிழன் கல்லே 1967 வரை காமராசர்வரை ஹிந்தி படிச்சோம் ஒன்னும் குறைஞ்சு போடலே இந்தியாவின் எந்தமூலைக்கும் சென்று வேலைபார்த்த காலம் அது இந்த கேவலம் திமுக வந்தது முதல்ல கைவச்சானுங்க ஹிந்திபடிக்காதேன்னு சொல்லுன்னு தமிழ் கூடஒழுங்கபேசாத திமுகளே பலர் உண்டு இன்னிவரை ஷா ஜா ஸ க்ஷ இதெல்லாம் சுட்டுப்போட்டாலும் நாக்குலே தர்பையே பொட்டுப்பொசுக்கினாலும் வரதுஅவாளுக்கு இது உண்மை எல்லோர்ருக்கு தாயபாஷை தவிர மற்றவைகள் தெரிஞ்சால் தப்பே இல்லீங்க
Rate this:
Cancel
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
23-செப்-201911:25:10 IST Report Abuse
S.V.SRINIVASAN இந்துக்கள் அதிகம் வாழும் நம் பாரத நாட்டில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மத சார்பின்மை என்ற போர்வையில் இந்து மதத்தை எதிர்த்து கொண்டிருக்கும்போது இந்து மதத்தை ஊக்குவிப்பதில் என்ன தவறு. சசிதரூர் நீயே ஒரு இந்து என்பதை மறந்து விடாதே.
Rate this:
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
23-செப்-201909:39:13 IST Report Abuse
chakra கொலை குற்றத்தில் இருந்து தப்பிக்கணுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X