பொது செய்தி

இந்தியா

370 ஒரு புற்றுநோய்: ராஜ்நாத் சிங்

Updated : செப் 22, 2019 | Added : செப் 22, 2019 | கருத்துகள் (9)
Advertisement

பாட்னா : காஷ்மீரை ரத்தம் சிந்த வைத்த ஒரு கொடிய புற்றுநோய் தான் 370 சட்டப்பிரிவு என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


பாட்னாவில் பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், " 1965 மற்றும் 1971 களில் செய்த அதே தவறை பாக்.,மீண்டும் செய்து கொண்டிருக்கிறது. அண்டை நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி, அப்பட்டமாக மனித உரிமைகளை மீறி வருகிறது. 370 சட்டப்பிரிவு என்பது புற்றுநோயை போன்று, காஷ்மீரை ரத்தம் சிந்த வைத்தது. காஷ்மீர் மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமானவர்கள் 370 பிரிவு நீக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

370 பிரிவு விவகாரத்தில் பா.ஜ., ஒருபோதும் தனது நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பொறுப்பற்ற முறையில் எதையும் செய்வும் இல்லை. 370 பிரிவு கிழித்தெறியப்பட்டதில் இருந்தே கட்சியின் நேர்மையும், நம்பகத்தன்மையும் தெரியும்.
பாக்.,கின் எல்லை தாண்டி பயங்கரவாதத்தால் காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தினால் மட்டுமே இனி பாக்., உடன் பேச்சுவார்த்தை. அத்துடன் காஷ்மீர், இந்தியாவின் உள்ளார்ந்த பகுதியை என்பதை பாக்., நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இனி பேச்சுவார்த்தை என்பது பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றியதாக மட்டுமே இருக்கும்" என பேசி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INNER VOICE - MUMBAI,இந்தியா
23-செப்-201911:17:51 IST Report Abuse
INNER VOICE Sri.Rajnath Singh, rightly said. Thanks to BJP govt for removing article 370. Bharat matha ki jai. JAI HIND
Rate this:
Share this comment
Cancel
23-செப்-201911:00:59 IST Report Abuse
ஆப்பு சரி..சரி...புற்றுநோயோட 70 வருஷம் வாழ்ந்தாச்சு. இவிங்க கீறி ஆத்தறேன்னு போய் ஏடாகூடமா ஆயிடப்போகுது.
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
23-செப்-201901:21:18 IST Report Abuse
ashak நான் கூட ராஜ்நாத்துக்கு தான் புற்றுநோயோ என்று தலைப்பை பார்த்து நினைத்து விட்டேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X