மோடி நிகழ்ச்சி:50ஆயிரம் பேர் திரண்டனர்

Updated : செப் 22, 2019 | Added : செப் 22, 2019 | கருத்துகள் (30)
Advertisement

ஹூஸ்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கவுள்ள ஹவ்டி மோடி நிகழ்ச்சியில், அமெரிக்கர்கள், இந்தியர்கள் என 50 ஆயிரம் பேர் திரண்டனர்.
இந்திய பிரதமர் மோடி பங்கேற்கும் 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பங்கேற்று, 30 நிமிடங்கள் உரையாற்ற உள்ளார். போப்பை தவிர, அதிகமான மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்கா வரும் வெளிநாட்டு தலைவர் ஒருவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.






இதற்கு முக்கிய காரணம் அடுத்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் தான். இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக பதற்ற நிலை ஒருபுறம் இருந்து வந்தாலும், இந்தியர்கள் - அமெரிக்கர்கள் அதிகமானவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் இந்த வாய்ப்பை தனது தேர்தலுக்காக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார் டிரம்ப்.

டெக்சாஸ் மாகாணத்தை பொறுத்தவரை, டாப் 10 மெட்ரோபொலிடன் நகரங்களில் இந்திய-அமெரிக்கர்கள் அதிகம் வாழும் இரண்டு நகரங்கள் ஹூஸ்டன் மற்றும் டல்லாஸ். இதற்கு முன் மோடி அமெரிக்கா சென்ற போது நியூயார்க், சான் ஜோஸ், வாஷிங்டன் நகரங்களிலேயே அவரது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் டிரம்ப் கலந்து கொள்வதற்காகவே இந்திய -அமெரிக்கர்கள் அதிகம் வசிக்கும் ஹூஸ்டன் நகரம் இம்முறை மோடியின் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.




2016 ம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட தேசிய ஆசியர்கள் - அமெரிக்கர்கள் ஆய்வின்படி, ஹூஸ்டனில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தான் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்கு அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். அடுத்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டுமானால், இந்தியர்களின் ஓட்டுக்கள் முக்கியம்.
கடந்த முறை அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு 77 சதவீதம் இந்தியர்கள் ஓட்டளித்துள்ளனர். ஆனால் டிரம்பிற்கு வெறும் 16 சதவீதம் பேர் மட்டுமே ஓட்டளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MIRROR - Thamizhagam,இந்தியா
23-செப்-201922:52:36 IST Report Abuse
MIRROR அதெல்லாம் சரி. அந்த ஜிடிபி ன்னு ஏதோ சொல்லுவாங்களே ..... அது என்ன ஆச்சு.... நாட்டில் இருக்குதா .... இல்ல ....
Rate this:
Share this comment
Cancel
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
23-செப்-201907:07:15 IST Report Abuse
Sam This மாஸ் உனக்கு இல்ல trumb அவர்தான் எங்கள் ப்ரெசிடெண்ட்
Rate this:
Share this comment
Cancel
Viswam - Mumbai,இந்தியா
23-செப்-201906:12:27 IST Report Abuse
Viswam உள்ளூரில் இருக்கும் தமிழர்கள் திராவிட சூழ்ச்சியில் சிக்கி ஒரு தேசிய தலைவரை (காமராஜர் உள்பட) மதித்தது இல்லை. மூன்று முறை முதலமைச்சராக இருந்து பிறகு இரண்டாம் முறையாக பிரதமர் ஆகியிருக்கும் ஒருவரை சன் டிவி மற்றும் உள்ள டப்பா டிவி பார்த்து தவறாக எடை போடும் தமிழ்நாட்டை என்னவென்று சொல்லுவது. மோடியின் கூட்டம் உண்மையான தலைவரை நேசிக்கும் கூட்டம். ஓசி சோறுக்கும் சரக்குக்கு வரும் கூட்டம் கட்டாயம் அமெரிக்காவில் இல்லை. சென்ற இடமெல்லாம் சிறப்பு எனில் அது நமது பிரதமரின் பதவியை உலகளவில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவர் என பறைசாற்றும் நிலை. காழ்ப்புணர்ச்சியை விட்டு இந்தியனாக ஒன்றுபட்டு இந்த தன்னலமில்லா தலைவரை அயல்நாட்டு மண்ணில் நமது நாட்டு தலைவராக உணர்ந்து பெருமை கொள்வோம். ஐம்பதுஆயிரம் என்ன, நூறு கோடிக்கு மேல் அவர் பின் நடை போடும் இந்தியர்கள் இந்த மண்ணில் உள்ளனர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X