எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

சுங்கச் சாவடிகளில் 'பாஸ் டேக்' முறை : ஆணையம் முடிவு

Updated : செப் 23, 2019 | Added : செப் 22, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
சுங்க, சாவடி, 'பாஸ் டேக்' ,முறை, ஆணையம் ,முடிவு

சென்னை:நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும், 'பாஸ் டேக்' முறையை, டிசம்பர், 1 முதல் கட்டாயமாக்க, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

நாடு முழுவதும், வாகன பெருக்கம் அதிகரித்துள்ளது. தற்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு, சுங்கச்சாவடிகளில், ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், நெரிசல் மிகுந்த நேரங்களில், வாகனங்கள், சுங்கச் சாவடிகளில், பல மணி நேரம் காத்திருக்கின்றன. 10 வினாடிகள்இதனால், குறிப்பிட்ட நேரத்தில், சரக்கு போக்குவரத்தை நிறைவு செய்ய முடியாமலும், டீசல் பயன்பாடு அதிகரிப்பதாலும், லாரி உரிமையாளர்கள், தொழில் செய்ய முடியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல, டாக்சி உள்ளிட்ட வாடகை வாகனங்களுக்கும், வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இதை தவிர்க்கும் வகையில், நாடு முழுவதும், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும், பாஸ் டேக் முறையை, டிசம்பர், 1 முதல், கட்டாயமாக்க, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்து உள்ளது.இந்த முறையில், வாகன உரிமையாளர்கள், வாகனத் தின், ஆர்.சி., புத்தகம், தங்களின் புகைப்படம், முகவரி சான்று உள்ளிட்ட விபரங்களை கொடுத்து, பாஸ் டேக் கார்டுகளை பெற வேண்டும்.

இந்த, பாஸ் டேக் கார்டு களை பயன்படுத்தி, 'பிரீ பெய்டு' முறையில், கட்டணத்தை செலுத்த வழி வகை செய்யப்படுகிறது. அதாவது, பாஸ் டேக் கார்டில், 'ரேடியோ பிரீகொய்ன்சி ஐடென்டிபிகேஷன்' எனப்படும், ஆர்.எப்.ஐ.டி., தொழில்நுட்பத்துடன் இணைந்த கார்டுகள், வாகனத்தின் முன் பகுதியில் ஒட்டப்படும். வாகனம் சுங்கச் சாவடியை கடக்கும் போது, சுங்கச்சாவடியில் உள்ள, சென்சார்கள், கட்டணத்தை கழித்து விடும். இதனால், தடையின்றி, சுங்கச் சாவடி களை, 10 வினாடிகளில் கடந்து விடலாம். கட்டண சலுகைசோதனை ரீதியாக, சில சுங்கச்சாவடிகளில், இந்த நடைமுறை உள்ளது. அங்கு, பாஸ் டேக் வாகனங்களுக்கு மட்டும், தனி வழித்தடம் உள்ளது.

இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:பாஸ் டேக் கட்டண முறையை அமல்படுத்த, தனியார் நிறுவனங்களுடன், நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. துவக்கத்தில், 10 சதவீத கட்டண சலுகை கிடைக்கும். இதனால், வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டியதில்லை; போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் குறையும்.தமிழகத்தில் உள்ள, 46 சுங்கச்சாவடிகளிலும், இந்த நடைமுறை, டிசம்பர், 1ல், நடைமுறைக்கு வரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
23-செப்-201908:28:29 IST Report Abuse
தமிழ் மைந்தன் தனது சொந்தவாகனத்தில் G என எழுதுபவர்கள் அனைவருமே இட ஒதுக்கீடு அலுவலர்களே......
Rate this:
Cancel
23-செப்-201906:12:22 IST Report Abuse
மகாதேவி,சென்னை. cash ஆ கட்டினா fast tag கட்டணத்தை விட 25 அதிகமாக கட்டணும்னு ஒரு விதி முறைய கொண்டு வந்தா, 25 ரூவா தண்டம் அழனுமேன்னாவது உடனே fast tag க்கு மாறுவான். அத எழுத்து எவனும் கோர்ட்டுக்கு போனாலும் ஒன்றும் பெரிசா நடக்காது.. மேலும் அடுத்த மாசம் 1 ஆம் தேதியில இருந்து FC க்கு வர்ற எல்லா வண்டியிலயும் fast tag sticker ஒட்டியிருந்தாதான் FC என்று RTO க்கு உத்தரவு போடுங்க.நெம்பரில் G சீரியல் இல்லாமல் கண்டது எல்லாம் ஸ்டிக்கரிலும், பெயின்டிலும் G ஐ ஒட்டிக் கொண்டு டோல்கேட்டை ஏமாற்றுவதால் ஏற்படும் இழப்பும், கட்சிக்கொடி கட்டின காரால வர்ர வருமான இழப்பை கூட தடுக்கலாம் .கட்டண விலக்கையும் விளக்கும் fast tag sticker ம் கட்டாயம் இருக்க வேண்டும். ஏனெனில் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக விடக் கூடாது பெல்ட் கட்டாயம் எல்லா டோல காட்டிலும் இருக்கனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X