பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கல்யாண் சிங்குக்கு, 'சம்மன்'

Added : செப் 22, 2019
Share
Advertisement
 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கல்யாண் சிங்குக்கு, 'சம்மன்'

புதுடில்லி:உத்தர பிரதேச மாநிலம்,அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், நேரில் ஆஜராக, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர், கல்யாண் சிங்குக்கு, சிறப்பு நீதிமன்றம், 'சம்மன்' அனுப்பி உள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்டது. அப்போது, மாநில முதல்வராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, கல்யாண் சிங் இருந்தார்.பாபர் மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டியதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாதி உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், 1993ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், கல்யாண் சிங், ராஜஸ்தான் மாநில கவர்னராக இருந்ததால், அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய, உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. 'அவருடைய பதவிக் காலம் முடிந்த பிறகு, குற்றச்சாட்டு பதிவு செய்யலாம்' என, உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.கடந்த, ஐந்து ஆண்டுகளாக, ராஜஸ்தான் மாநில கவர்னராக இருந்த கல்யாண் சிங்கின் பதவிக் காலம், சமீபத்தில் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, அவர், பா.ஜ.,வில் மீண்டும் சேர்ந்தார்.உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அன்றாடம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, கல்யாண் சிங்கின் கவர்னர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதாக, வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அது தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், வரும், 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி, கல்யாண் சிங்குக்கு, சிறப்பு நீதிமன்றம், சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X