பொது செய்தி

தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே 10 ஆயிரம் பனை விதைகள் நடவு

Added : செப் 23, 2019
Share
Advertisement
புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே குளக்கரையில், 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.புதுக்கோட்டை, ஆலங்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், சில ஆண்டுகளாக, பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனது. நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு, பராமரிப்பின்றி காணப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம், வெகு ஆழத்திற்கு சென்றது.தொடர்ந்து, கொத்தமங்கலம், வடகாடு, சேந்தன்குடி உட்பட, பல்வேறு
 புதுக்கோட்டை அருகே 10 ஆயிரம் பனை விதைகள் நடவு

புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே குளக்கரையில், 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

புதுக்கோட்டை, ஆலங்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், சில ஆண்டுகளாக, பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனது. நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு, பராமரிப்பின்றி காணப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம், வெகு ஆழத்திற்கு சென்றது.தொடர்ந்து, கொத்தமங்கலம், வடகாடு, சேந்தன்குடி உட்பட, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த திட்டமிட்டனர். இதன் ஒரு பகுதியாக, இனி வரும் காலங்களில், பொழியும் மழை நீரை சேமிக்கும் வண்ணம், ஆறு, குளம் மற்றும் வரத்து கால்வாய்களை சீரமைத்தனர். இதுவரை, 10க்கும் மேற்பட்ட குளங்களை துார் வாரியுள்ளனர்.கொத்தமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மக்கள், நீர்நிலைகளின் கரைகளை பாதுகாக்க, பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர். 80 ஏக்கர் உள்ள பெரியகுளத்தின் கரைகளில், நேற்று பனை விதைகளை நடவு செய்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மூலம், 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. 3 ஆயிரம் விதைகள்அரியலுார், திருமானுார் பகுதியில், இளைஞர்கள் சேர்ந்து, 'அன்புடன் அக்னி சிறகுகள்' என்ற அமைப்பை துவங்கியுள்ளனர். இதன்மூலம், 2015ம் ஆண்டு முதல் மரக்கன்றுகள் நடுதல், பனை விதைகள் நடுதல், ஏரி, குளங்களில் உள்ள சீமைக் கருவேல முட்செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட, சமூக பணிகளை செய்து வருகின்றனர்.நீர்நிலைகள் மற்றும் நிலத்தின் மண் அரிப்பை தடுக்கும் விதமாக, அரியலுார் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில், திருமானுார் அருகேயுள்ள விரகாலுார் கிராமத்திலிருந்து, முடிகொண்டான் கிராமம் வரை, 3,000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.சமூக ஆர்வலர் முத்துக்குமரன் தொடங்கி வைத்து, பனை விதைவழங்கி, பனை மரத்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசினார். திருமானுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பனை விதைகளை நடவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X