அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரனை தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மையம் கட்சியும் ஓட்டம்!

Updated : செப் 24, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (73)
Share
Advertisement
தினகரன், கமல், மக்கள் நீதி மையம், கட்சி, ஓட்டம், விக்கிரவாண்டி, நாங்குநேரி

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது இல்லை என, அ.ம.மு.க., பொதுச்செயலர், தினகரனை தொடர்ந்து,நடிகர் கமலின், மக்கள் நீதி மையம் கட்சியும் ஓட்டம் பிடித்துள்ளது. '2021ல், மக்கள்போராதரவுடன், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் முன்னேறுவதால், இடைத்தேர்தலில் போட்டியில்லை'என, கமல் அறிவித்துள்ளார். அதேநேரத்தில், இந்த இரு தொகுதிகளிலும், இன்றுவேட்புமனு தாக்கல் துவங்குகிறது. இடைத்தேர்தலில், தி.மு.க., - காங்.,கட்சிகளுடன், அ.தி.மு.க., நேரடியாக மோதுகிறது.

கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், நாங்குநேரி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, வசந்தகுமார் வெற்றி பெற்றார்.இவர், இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று, எம்.பி.,யானதால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். விக்கிரவாண்டி தொகுதி,தி.மு.க., - எம்.எல்.ஏ., ராதாமணி உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.எனவே, இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அடுத்த மாதம், 21ம் தேதி நடைபெறும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியானதும், அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், மும்முரம் காட்டி வருகின்றன; வேட்பு மனுக்கள் வினியோகம் இரு கட்சியிலும் துவங்கியுள்ளது.நேர்காணல், அடுத்து வேட்பாளர் அறிவிப்புக்கான ஏற்பாடுகளிலும் தீவிரமாக உள்ளன.தேர்தல் கமிஷன் அறிவித்தபடி, இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கும் நிலையில், அடுத்தடுத்து இரண்டு கட்சிகள், தேர்தல் களத்தில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளன.

'எங்களுக்கு ஒரே சின்னம் கிடைக்காததால், இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை' என,
அ.ம.மு.க., பொதுச்செயலர், தினகரன் நேற்று முன்தினம் அறிவித்தார்.அவரை தொடர்ந்து, நடிகர் கமலின் மக்கள் நீதி மையம் கட்சியும், இடைத்தேர்தலில் களமிறங்காமல் ஓட்டம் பிடித்துள்ளது.

கமல் நேற்று வெளியிட்ட அறிக்கை:பழைய கொள்ளையர் கட்சிகளையும், அதன்கூட்டு பங்காளிகளையும், பெருவாரியான மக்களின் எண்ணப்படி, ஆட்சியில்இருந்து அகற்ற வேண்டும்.வரும், 2021ல் ஆட்சி பொறுப்பை, மக்களின் பேராதரவுடன் கைப்பற்ற வேண்டும். மக்களாட்சிக்கு வழி வகுக்கும்முனைப்போடு, மக்கள் நீதி மையம் விரைவாக முன்னேறி வருகிறது. நாங்குநேரியிலும்,விக்கிரவாண்டியிலும், தங்கள் தலைவர்களையும், அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இந்த எண்ணத்துடன், ஆட்சியிலிருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் என்ற, இந்த ஊழல் நாடகத்தில், மக்கள் நீதி மையம் பங்கெடுக்காது.இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.


நேரடி போட்டி


விக்கிரவாண்டியில், தி.மு.க.,வுடனும், நாங்குநேரியில் காங்கிரசுடனும், ஆளுங்கட்சியான, அ.தி.மு.க., நேரடியாக மோதுகிறது. இரு தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும் என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.தேர்தல் கமிஷன் அறிவித்தபடி, இரு தொகுதிகளிலும், இன்று வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது; வரும், 30ம்தேதியுடன் மனுத்தாக்கல் நிறைவடைகிறது.தி.மு.க.,வுக்கு, ம.தி.மு.க., - இந்தியகம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. அ.தி.மு.க.,வுக்கு, பா.ம.க., - த.மா.கா., போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.ஓரிரு நாட்களில், முக்கிய அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை அறிவித்து விடும் என்பதால், தேர்தல் களம் சூடுபிடிக்கும்.


அ.தி.மு.க.,வில் 27 பேர் மனு


* அ.தி.மு.க.,வினர், நேற்று அஷ்டமி திதி என்றாலும், அதைப்பற்றி கவலைப்படவில்லை. அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நிர்வாகி மகாலிங்கம், விருப்ப மனு வழங்கினார். நாங்குநேரியில் போட்டியிட, திரைப்பட இயக்குனர், பி.சி.அன்பழகன், முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலர், கணேஷ்ராஜா உட்பட, 18 பேர் விருப்ப மனுக்கள் பெற்றனர்.

* விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட, முன்னாள் எம்.பி., லட்சுமணன், வேலு, முத்தமிழ்செல்வன் உட்பட, ஒன்பது பேர் விருப்ப மனு பெற்றனர். இரு தொகுதிகளுக்கும் சேர்த்து, 27 பேர் விருப்பு மனு பெற்றுள்ளனர். விருப்ப மனுக்களை, இன்று மாலை, 3:00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

* மாலையில், அ.தி.மு.க., வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது. அதன்பின், கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., ஆகியோர் இணைந்து, வேட்பாளர்களை அறிவிக்க உள்ளனர். புதுச்சேரியில், காமராஜர் தொகுதிக்கான விருப்ப மனு பெறுதல் மற்றும் நேர்காணலும், இன்று நடக்கிறது.


அஷ்டமியால் புறக்கணிப்பு


சென்னை அறிவாலயத்தில், விக்கிரவாண்டி தொகுதிக்கான விருப்ப மனுக்களை பெறும் பணிகளில், அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலர்கள், பூச்சி முருகன், கு.க.செல்வம், நிர்வாகி ஜெயகுமார் ஆகியோர் ஈடுபட்டனர்.நேற்று அஷ்டமி என்பதால், விருப்ப மனுக்கள் வாங்குவதை, தி.மு.க.,வினர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இன்று மனு தாக்கல் செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல், கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில், நாளை நடக்கிறது. பின், வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது.

நாங்குநேரி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள், சென்னை சத்தியமூர்த்திபவனில், இன்றும், நாளையும் வழங்கப்படுகின்றன. 'சீட்' பெற கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், வேட்பாளரை வழக்கம் போல, டில்லி மேலிடம், கடைசி நேரத்தில் அறிவிக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
23-செப்-201922:06:48 IST Report Abuse
PANDA PANDI ஓட்டம். பாஜக ஓட்டம். தமிழ் கான் கிராஸ் ஓட்டம். பம்மல் மக்கள் கட்சி ஓட்டம். நேஷனல் ப்ரொஃரெஸ்ஸிவ் DRAVIDA CORPORATION (NPDC) COMPANY ஓட்டம். பாஜக திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தமிழ் தாய் நாட்டில் தனித்து நின்று NOTA வை வீழ்த்தி வெற்றிபெறுமா என்பது BILLION DOLLAR கேள்வி.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
24-செப்-201910:10:18 IST Report Abuse
Chowkidar NandaIndiaநோட்டாவோடு போட்டி போடுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும். ஆனால் அது நிச்சயம் கான்க்ராஸ் கட்சிக்கு கிடையாது. கான்க்ராஸ் தன் வழக்கப்படி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதிக்கு நூறு ஓட்டுகள் வாங்குமா என்பதும் இங்கு மில்லியன் டாலர் கேள்வி?...
Rate this:
Cancel
elangovan - TN,இந்தியா
23-செப்-201920:49:49 IST Report Abuse
elangovan MNM Nammavar taken wrong decision. MNM should fight against criminals and this the chance to see the people in Democratic way. Winning or losing is not the matter . Our goal to reach the people and throw out the corruption parties . MNM to reconsider the decesion to take role in the coming bi election. People to think and vote do not forgot the past incidents happen in both parties and their corruption's.
Rate this:
Cancel
MONKEY BATH - Chennai,இந்தியா
23-செப்-201919:14:00 IST Report Abuse
MONKEY BATH இவர் பி ஜி பியின் பினாமி. வேலூரில் நிற்காததால் குறைந்த வாக்கில் d m k வெற்றி பெற்றது. எனவே மேலிடத்து (டெல்லி) உத்தரவு மற்றும் ரஜினியின் வேண்டுதலால் இவர் நிற்கவில்லை என்பது தான் உண்மை. அப்படியாவது இந்த இடை தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நப்பாசை (admk).
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X