சிறுநீரகம் செயல் இழப்பை குணப்படுத்த நவீன சிகிச்சை

Added : செப் 23, 2019 | |
Advertisement
சென்னை:'ரத்தம், திசு பரிசோதனைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, சிறுநீரக பரிசோதனைக்கும் கொடுக்க வேண்டும்' என, சிறுநீரக பரிசோதனை மாநாட்டில் வலியுறுத்தப் பட்டது.சென்னை, மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில், 'யூரிகான் - 2019' என்ற தலைப்பில், நவீன சிறுநீரக பரிசோதனை குறித்த, இரண்டு நாள் மாநாடு நடந்தது.இதில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, சிறுநீரகவியல் துறை
 சிறுநீரகம் செயல் இழப்பை குணப்படுத்த நவீன சிகிச்சை

சென்னை:'ரத்தம், திசு பரிசோதனைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, சிறுநீரக பரிசோதனைக்கும் கொடுக்க வேண்டும்' என, சிறுநீரக பரிசோதனை மாநாட்டில் வலியுறுத்தப் பட்டது.

சென்னை, மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில், 'யூரிகான் - 2019' என்ற தலைப்பில், நவீன சிறுநீரக பரிசோதனை குறித்த, இரண்டு நாள் மாநாடு நடந்தது.இதில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, சிறுநீரகவியல் துறை மருத்துவ நிபுணர்கள், நவீன பரிசோதனை முறைகள் குறித்து விவாதித்தனர். ஆய்வு கட்டுரைகள், பட காட்சிகளுடன் சமர்பிக்கப்பட்டன.மாநாட்டிற்கு, மியாட் சிறுநீரகவியல் பிரிவு இயக்குனர், ராஜன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.மியாட் இன்டர்நேஷனல் ஆய்வக மருத்துவத் துறை இயக்குனர், ஸ்ரீனிவாஸ் பேசுகையில், ''நோயாளியின் ஆரோக்கியத்திற்கு, ஆய்வகங்கள் தான், முக்கிய பங்கு வகிக்கின்றன.''எனவே ரத்தம், திசு பரிசோதனைக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, சிறுநீரக பரிசோதனைக்கும் கொடுக்க வேண்டும்,'' என்றார்.மாநாட்டில் சிறுநீரக நிபுணர்கள் முன் வைத்த கருத்துகள்: சிறுநீரக பாதிப்பு என்பது, வயது வித்தியாசம் இன்றி, அனைவருக்கும் ஏற்படக்கூடியது. சிறுநீரகம் செயல் இழக்க தொடங்கும்போது, அதற்கான அறிகுறி எதுவும், வெளியில் தெரியாது. ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மூலமே, தெரிந்து கொள்ள முடியும் உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தாலும் ஆண்டிற்கு ஒருமுறை, சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப்படி, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் சிறுநீரக பாதிப்புகளை முன் கூட்டியே அறிந்து கொள்ள, பல ஆய்வுகள் இருந்தாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததால், கடைசி நேரத்தில் தான், சிறுநீரக பாதிப்பை தெரிந்து கொள்கின்றனர். இதுவே, சிகிச்சையின் போது சிக்கலாகி விடுகிறது கட்டுப்படாத சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரக தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடல் பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு, உணவு நச்சுகள் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது இந்தப் பாதிப்புகளை, ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால், பிரச்னைகள் குறையும். தவறினால், நாளடைவில் எந்த வேலையும் செய்ய முடியாத அளவுக்கு, சிறுநீரகம் செயலிழந்து விடும் சிறுநீரகம் செயல் இழப்பைக் குணப்படுத்தவும், அதனால் ஏற்படுகிற மற்ற பாதிப்புகளை சரி செய்யவும், தற்போது நவீன சிகிச்சைகள் நிறைய உள்ளன. நோயாளியின் உடல் நலம் மற்றும் நோயின் தீவிரத்தை பொருத்து சிகிச்சை அமையும்.இவ்வாறு, சிறுநீரகவியல் நிபுணர்கள் பேசினர்.விழாவில், சிறுநீரக நோய்களை தெரிந்து கொள்வதற்காக, மருத்துவர்களுக்கான வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X