அரசியல் செய்தி

தமிழ்நாடு

'போராட்டங்கள் நிறைந்த கருணாநிதியின் வாழ்க்கை'

Updated : செப் 23, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (26)
Advertisement
 'போராட்டங்கள், நிறைந்த ,கருணாநிதியின், வாழ்க்கை'

ஈரோடு:''வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, மறைந்த காலத்திலும், போராட்டம் நிறைந்ததாகவே, கருணாநிதி வாழ்க்கை இருந்தது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா, ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்காவில் நேற்று நடந்தது. சிலையை திறந்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:மிகுந்த போராட்டத்துக்கு இடையே, இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது. கருணாநிதி வாழ்க்கையே போராட்டம்தான். மாணவர் பருவத்தில், பள்ளியில் சேர்க்க, நிர்வாகிகள் மறுத்தனர்.

'சீர்திருத்தவாதி, சுய மரியாதைக்காரன்; பிற மாணவர்களை கெடுத்து விடுவாய்' என காரணம் கூறினர். 'பள்ளி எதிரேயுள்ள குளத்தில் குதித்து, தற்கொலை செய்வேன்'என, கருணாநிதி அறிவித்த பிறகே, பள்ளியில்சேர்த்தனர்.திருமணத்தின்போது, மணமகனாக கழுத்தில் மாலையுடன், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றார்.வாழ்ந்த காலத்தில் அல்ல; மறைந்த காலத்திலும், போராட்டம் நிறைந்ததாகவே அவர் வாழ்க்கை இருந்தது.

அண்ணாதுரைக்கு பக்கத்தில், மெரினாவில் ஓய்வெடுக்க, ஆறடி நிலத்தை ஒதுக்கக்கூட, தமிழக அரசு மறுத்தது. இறுதியில், நீதிமன்றத்தை நாடி வெற்றி பெற்றோம்.தற்போது, அவரது சிலை வைக்கவும், போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதல்படி, தமிழகம் முழுவதும், அரசு அனுமதியோடு, கருணாநிதி சிலை வைக்கப்படும். இவ்வாறு அவர்பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan - karaikudi,இந்தியா
23-செப்-201922:49:03 IST Report Abuse
Viswanathan நாங்களும் மானசீகமாக போராடுகிறோம் இந்த திமுக கட்சி எப்போ ஒழியும் என்று
Rate this:
Share this comment
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
23-செப்-201921:49:12 IST Report Abuse
G  Mahalingam சொத்தை எப்படி காப்பாற்ற எவ்வளவு போராட்டம் நடத்தினார் என்று தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும். கட்சதீவை கொடுத்து சொத்தை காப்பாற்றி கொண்டீர்கள்
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
23-செப்-201917:57:39 IST Report Abuse
RajanRajan நல்ல மேய்ப்பன் வாழ்வாங்கு வாழ்வன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X