ஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி

Updated : செப் 23, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (57)
Share

யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் இடம் பெற்ற கேள்வி சர்ச்சையை எழுப்பியுள்ளது.



latest tamil news



ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக யு.பி.எஸ்.சி. தேர்வுகள் செப். 20 முதல் 29 வரை நடக்கிறது. முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும். இதில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.தற்போது நடத்தப்பட்டு வரும் 'மெயின்' தேர்வில் நேற்று முன்தினம் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை எழுப்பியுள்ளது.


latest tamil news



'மதச்சார்பின்மை என்ற பெயரால் நமது கலாசார நடைமுறை சந்திக்கும் சவால்கள் என்ன' என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 'நமது அரசியல் சாசனத்தின்படி மதச்சார்பின்மையே நாட்டின் முக்கிய கொள்கை; அதற்கு எதிரானதாக இந்த கேள்வி அமைந்துள்ளது' என அவர்கள் விமர்சித்து உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X