பொது செய்தி

தமிழ்நாடு

கீழடி அகழாய்வுக்கு தேசிய அங்கீகாரம்?

Updated : செப் 23, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (67)
Advertisement

சென்னை: கீழடி அகழாய்வுக்கு, தேசிய அளவில் அங்கீகாரம் பெறுவதற்காக, தமிழக தொல்லியல் துறை அமைச்சர், பாண்டியராஜன், டில்லி சென்றுள்ளார்.


தமிழகத்தில், கொற்கை, பூம்புகார், அழகன்குளம், ஆதிச்சநல்லுார் உள்ளிட்ட இடங்களில், சங்ககால தமிழர்களின் வாழ்வியல் சான்றுகள் உள்ளதாக, தொல்லியல் துறை ஆய்வுகளில் தெரியவந்தது.மத்திய தொல்லியல் துறையும், அதைத்தொடர்ந்து, தமிழக தொல்லியல் துறையும், சமீபத்தில், அகழாய்வு செய்த இடம், சிவகங்கை மாவட்டம் கீழடி. அருங்காட்சியகம். இங்கு, கி.மு., 6ம் நுாற்றாண்டின் வாழ்வியல் சான்றுகளும், கட்டட சான்றுகளும் கிடைத்துள்ளன. இவற்றை, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றவும், அங்கு அருங்காட்சியகம் அமைக்கவும், தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, தமிழக தொல்லியல் துறை அமைச்சர், பாண்டிய ராஜன், டில்லி சென்றுள்ளார். டில்லியில் உள்ள, 'யுனஸ்கோ' அரங்கில், இன்றும், நாளையும்(செப்., 23, 24) நடக்கும், பன்னாட்டு திருக்குறள் மாநாட்டை துவக்கி வைக்கிறார். பின், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் மற்றும் மத்திய கலாச்சாரத் துறை செயலர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மொழிகளுக்கான செயலர் உள்ளிட்டோரை சந்திக்கிறார். அவர்களிடம், தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய அகழாய்வுகளுக்கு, அனுமதி வழங்குவதன் அவசியம் குறித்தும், கீழடியின் தொன்மை குறித்தும் விளக்க உள்ளார்.


அனுமதி:


மேலும், கீழடியில், சர்வதேச தொல்லியல் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் அனுமதி கோர உள்ளார்.மேலும், சென்னை அருங்காட்சியகத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து, மத்திய கலாசாரத்துறை அமைச்சர், பிரகலாத் சிங் படேலிடம் விளக்க உள்ளார். அமைச்சருடன், தமிழக சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையின் கூடுதல் செயலர், அபூர்வ வர்மா, தொல்லியல் துறை கமிஷனர், உதயச்சந்திரன் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kathir -  ( Posted via: Dinamalar Android App )
23-செப்-201916:34:28 IST Report Abuse
kathir need to establish international standard museum
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
23-செப்-201916:21:52 IST Report Abuse
ரத்தினம் இந்த வந்தேறி கூட்டங்களையும் திராவிட கும்பல்களையும் ஆராய்ச்சி இடத்தில் இருந்து தூரமாக தள்ளி வேண்டும். இவங்களால கெடுதி நேரலாம். .பண்டை தமிழன் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உலகறிய செய்தல் வேண்டும். .
Rate this:
Share this comment
Raj - coimbatore,இந்தியா
24-செப்-201900:28:07 IST Report Abuse
Rajஎன்ன பண்றீங்க ...பண்டைய நாகரீகம் பத்தி பேசற நீங்க முதல்ல தற்காலத்தில் வாழ்பவர்களை பற்றி நாகரீகமாக பேசுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
23-செப்-201916:17:10 IST Report Abuse
Narayan திராவிடம் ஆரியம் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை. தமிழகம் மட்டும்தான் இந்த பொய் தியரியை இன்னமும் நம்புது, காரணம் இன்னமும் வியாபித்து இருக்குற திராவிட தமிழ் தேசிய கருத்தியலாக்கம். திராவிட என்பது புவி சார்ந்த சமஸ்க்ரித சொல் மூன்று திசை கடல் சார்ந்த பகுதியை குறிக்கும் சொல். ஆரிய என்பது மனித மாண்புக்கான அட்ஜெக்ட்டிவ். இது இரண்டும் இனம் சார்ந்த சொற்களாக மாற்றியதே கால்டுவெல் மேக்ஸ் முல்லர் போன்ற ஐரோப்பியர்களின் தந்திரம். ரிக் வேத காலம் 3500 BCE முதலே நாம் அனைவரும் பல்வேறு வகையான தர்மம்(சனாதன தர்மம்) பின்பற்றும் ஒரே இன மக்கள்தான்.
Rate this:
Share this comment
A P - chennai,இந்தியா
25-செப்-201916:38:44 IST Report Abuse
A Pஉண்மையை உலகறிய உரைத்தமைக்கு திரு நாராயண் ( சுவிட்சர்லாந்து ) அவர்களுக்கு மிக்க நன்றி. நமது பாரம்பரியத்தை மறைத்து வரலாற்றை திரித்து ( நன்றாக கவனிக்கவும் " திருத்தி " அல்ல ) கூறிய வெளிநாட்டுக்காரன் சொல்வதை நம்புகிற கூட்டத்தை என்னவென்று சொல்வது ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X