பொது செய்தி

இந்தியா

கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுகிறதா பாக்.,?

Updated : செப் 23, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement

புதுடில்லி : பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி அளிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பாக்.,ஐ கருப்புப் பட்டியலில் சேர்க்க நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.latest tamil news


பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி அளிக்கப்படுவதை தடுக்க 27 அடிப்படை விதிகளை எப்ஏடிஎப் வகுத்துள்ளது. ஆனால் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டும், இந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்க பாக்., தவறி விட்டது. 27 ல் வெறும் 6 விதிகளை மட்டுமே பாக்., இதுவரை கையாண்டுள்ளது. இதனால் ஏற்கனவே பாக்., கிரே (Grey) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாக்.,ஐ கருப்பு பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக ஆலோசிப்பதற்காக பாரீசில் அடுத்த மாதம் எப்ஏடிஎப்.,ன் கூட்டம் நடைபெற உள்ளது.


latest tamil newsஇது குறித்து எப்ஏடிஎப்., கூறுகையில், ஐ.நா.,வால் தடை செய்யப்பட்ட 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளில் 5 பேர் மட்டுமே பாக்.,ல் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் லக்ஷர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையதும் ஒருவர். பாக்.,ல் இருந்து கிடைத்துள்ள தகவலின்படி, பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதில் தொடர்புடைய 900 க்கும் மேற்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் 750 பகல்ப் ஐ இன்ஸனியாத் அமைப்புடனும், 150 ஜெய்சி இ முகம்மது அமைப்புடனும் தொடர்புடையவை ஆகும். ஆனால் இது பற்றி இதுவரை பாக்.,தரப்பில் அதன் உரிமையாளர்கள் மீது எந்த நடவடிக்கையோ அல்லது வழக்குப்பதிவோ செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்.,ஐ கிரே பட்டியலில் எப்ஏடிஎப் சேர்த்து ஓராண்டு ஆகும் நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்ததாக 23 வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan - Madurai,இந்தியா
24-செப்-201911:16:09 IST Report Abuse
kannan இப்போதான் புரியுது சைக்கோ ஏன் கருப்பு பலூன் விட்டாரு ன்னு. அவருக்கு சப்போர்ட் நம்ம சுடலைக்கான்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-செப்-201919:28:32 IST Report Abuse
Rajagopal கருப்பட்டி வெலை வேற ஏறிப் போச்சு. அந்தப் பட்டியல்ல இவங்கள போட்டா வெலை மட்டும் எறங்கிருமாக்கும்.
Rate this:
Cancel
23-செப்-201914:25:07 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவனுங்க ட்ரவுசரே கிழிந்து தொங்குகிறது இதில் காஷ்மீருக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்களாம், போருக்கு கூட வருவார்களாம், கூடிய விரைவில் அங்கே உள்நாட்டு போர் வெடிக்க போகிறது , ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சில பகுதிகள் நம்முடன் சேரும் , பலுசிஸ்தான் தனி நாடாகும் , பாகிஸ்தான் என்கிற நாடு இருக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X