திகாரில் சிதம்பரத்துடன் சோனியா, மன்மோகன் சந்திப்பு

Updated : செப் 23, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (58)
Advertisement

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, காங்., இடைக்கால தலைவர் சோனியாவும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் நேரில் சென்று சந்தித்தனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரத்திடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றன. சிபிஐ.,யை தொடர்ந்து அமலாக்கத்துறையும் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் அனுமதி கேட்டு வருகிறது. இதற்கிடையில் உடல்நிலை, வயது ஆகியவற்றை காரணம் காட்டி சிதம்பரம் தரப்பில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, சிதம்பரத்தின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக.,21 ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்ட சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இதுவரை இருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செப்.,5 முதல் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், காங்., இடைக்கால தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் திகார் சிறைக்கு சென்று சிதம்பரத்தை சந்தித்தனர். முன்னதாக சிதம்பரத்தை சந்திப்பதற்காக அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் திகார் சிறைக்கு வந்திருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
24-செப்-201913:01:22 IST Report Abuse
Rpalnivelu சிதம்பரம் இன்னுமொரு சாதிக் பாட்சா வாக மாற வாய்ப்பிருக்கிறக்குறது. Beware chettiaar. Don't ask for Bail. Be in Jail for ur own safety.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
24-செப்-201906:58:56 IST Report Abuse
Sanny இந்திராணியை அப்ரூவர் ஆக்கி சிதம்பரம் கைது, இனி சிதம்பரத்தை அப்ரூவர் ஆக்கி சோனியா கைது என்று வரும். இப்படியே போய்கிட்டு இருக்கும், ஆனா யாருமே உள்ளேபோகமாட்டாங்க, திகாரில் ஹாலிடேய் என்ஜோய் பண்ணிட்டு வருவாங்க. அதோடு சட்டமும் தனது கடமை முடிந்தது என்று நிம்மதியாக இருக்கும், இதுதானே கனி, ராஜா கேசில் நடந்தது.
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-செப்-201919:26:19 IST Report Abuse
Rajagopal வசதில்லாம் எப்பிடி இருக்குதுன்னுக் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டுப் போவ வந்தாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல அவங்களும் திகாருல குடி போவ வேண்டிய நெலம வர போகுது. அதுக்காக சிதம்பரம் அய்யாவ மொதல்ல நேர்லயே கேட்டா நல்ல இருக்கும்னு போயிப் பாத்திருக்காங்க போல. இத்தன பேருக்கும் எடம் போதுமான்னு தெரில. அது போதாதுன்னா, இப்ப மமதா, கனிமொழி, ராசான்னுக் கூட்டம் சேந்துக்கிட்டேப் போவுது. எட நெருக்கடியாயிருச்சின்னா எப்புடி சமாளிக்கிறதுன்னு அம்மாவுக்கு கவலை வேற. அதான் நம்ம மண் பொம்மை சிங்கு அய்யாவையும் கூட்டிகிட்டுப் போயி எதாவது பேரம் பேசிப் பாக்கலாம்னு கூட அழைச்சிக்கிட்டுப் போயிருக்காங்க.
Rate this:
Share this comment
truth tofday - india,இந்தியா
24-செப்-201908:59:45 IST Report Abuse
truth tofdayஇதுபோல பொய் கொண்டு இருந்தால் பின்பு மோடி அமித் நிம்மி என்று கோடா வரிசை வரும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X