பொது செய்தி

இந்தியா

பங்குச்சந்தை தொடர்ந்து எழுச்சி: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் ஏற்றம்

Updated : செப் 23, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (5)
Advertisement

மும்பை: கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக எழுச்சியுடன் உள்ளன. கடந்த வெள்ளியன்று சென்செக்ஸ் 2000க்கும் அதிகமான புள்ளிகள் உயர்ந்த நிலையில் இன்று (செப்.,23) மேலும் 1000 புள்ளிகள் ஏற்றம் கண்டன.

காலை 9.30 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1031.58 புள்ளிகள் உயர்ந்து 39,346.01ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 263.75 புள்ளிகள் உயர்ந்து 11,537.95ஆகவும் வர்த்தகமாகின.






பொருளாதார மந்த நிலையை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த வெள்ளியன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட் வரியை 30 சதவீத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்தார். இதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் அன்றே அதிரடியாக ஏற்றம் கண்டன. ஒரே நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் முதலீடு 6.83 லட்சம் கோடியாக அதிகரித்தது. தொடர்ந்து அதன் தாக்கம் இன்றும் பங்குச்சந்தைகளில் எதிரொலிக்கிறது. இதனால் இன்றைய வர்த்தகமும் உயர்ந்து இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வர்த்தகத்தில் எச்டிஎப்சி., ஐடிசி., எல் அண்ட் டி., ஐசிஐசிஐ., மாருதி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் நிறுவன பங்குகள் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகின.






ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கம்


பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கமாக இருந்தது. வர்த்தக நேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.71.03ஆக வர்த்தகமானது. தொடர்ந்து காலை 10.50 மணியளவில் ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து வர்த்தகமானது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-செப்-201903:59:37 IST Report Abuse
J.V. Iyer நல்ல மத்திய அரசு இருக்கிறது. நல்லவர்கள், நேர்மையானவர்கள், கடின உழைப்பாளிகள், கைசுத்தமானவர்கள் மத்திய அரசை ஆளுகிறார்கள். முத்தாய்ப்பு வைத்ததுபோல மோடிஜி பிரதமர். கவலை வேண்டாம். நாடு வளர்ச்சியை நோக்கி போகிறது. குறை கூறாமல் அரசுக்கு ஒத்துழையுங்கள். பாஜக இருக்க பயமேன்?
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-செப்-201918:04:48 IST Report Abuse
மலரின் மகள்கள் ஒன்றிலிருந்து பணத்தை எடுத்து மற்றோரின்றில் மாற்றுவது தானே பெரும்பாலும் நடக்கிறது. புதியதாக வெளிநாட்டு முதலீடுகளோ அல்லது உள்நாட்டில் முதலீட்டாளர்களோ முதலீடு செய்தார்களா? புதியதாக பரஸ்பர நிதிநிறுவனங்களில் எவ்வளவு பணம் ஈர்க்கப்பட்டது. ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் எவ்வளவு பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டார்கள் என்பது தானே முக்கியம். எந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு பணம் சென்று சேர்ந்தது. ஐ பி ஓ மூலம் எட்டிய பணத்திற்கு பிறகு அவர்களுக்கும் பங்கு பரிவர்த்தனைக்கு என்ன சம்பந்தமானது. சென்செஸ் வியாபாரிகளால் நாட்டிற்கு என்ன பலன்? புதிதாக என்ற நிறுவனங்களும் பரிணமிக்கவில்லை. யாரும் பங்கு முதலீட்டில் பணம் கேட்க வரவில்லையே? புதிய நிறுவனங்கள் உற்பத்தி துறையில் இறங்க வில்லையே? பார்த்து கொண்டே இருங்கள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதிதாக எலக்ட்ரிக் முறையில் இயங்கும் புதிய நிறுவனங்களை அவர்கள் துவங்குவார்கள். பழைய நிறுவனங்களை மிகவும் குறைத்து கொண்டு அந்த நிலங்களையும் கம்பனியையும் அவர்கள் புதிதாக துவங்கிய நிறுவனத்திற்கு மாற்றி கொள்வார்கள். அதற்கான ஒத்திகையாகத்தான் அனைத்து வாங்கன்னு உற்பத்தியாளர்களும் ஆட்குறைப்பு, விற்பனையை குறைத்து கொண்டு உற்பத்தியை அதன் மூலம் குறைத்தது அதை வைத்து அரசின் சலுகைகள் என்று செல்கிறார்கள். கிழக்கிந்திய கம்பைக்காரர்கள் காலம் முதல் இன்றுவரை வியாபாரிகள் தான் அரசை ஆட்டுவிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Young Prince - Bangalore,இந்தியா
23-செப்-201914:29:37 IST Report Abuse
Young Prince ஹே டண்டணக்கா டண்டணக்கா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X