பொது செய்தி

இந்தியா

பாலகோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி: ராணுவ தலைமை தளபதி

Updated : செப் 23, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (38)
Share
Advertisement

சென்னை: பாக்.,ன் பாலாகோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் செயல்பட துவங்கி உள்ளதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.latest tamil news


சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பின் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: நாட்டின் எல்லையை காப்பதில் வீரர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். எல்லைகளை கையாளுவதில் நாடுகளிடையே வேறுபாடுகள் உள்ளன.

எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவதில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறோம். காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளை கண்டறிந்து ஒடுக்குவதில் ராணுவம் தீவிரமாக செயல்படுகிறது.


latest tamil news


பாக்.,ல் இயங்கும் பயங்கரவாதிகளுக்கும் காஷ்மீருக்கு இடையே இருந்த தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களுக்கு இடையேயான தொலைத் தொடர்பு துண்டிக்கப்படவில்லை. காஷ்மீருக்கு பயங்கரவாதிகளை அனுப்புவதற்காகவே பாக்., எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. எந்த அதஅதுமீறலை எப்படி கையாள்வது என நமக்கு தெரியும். எந்த மாதிரி பதிலடி கொடுக்க வேண்டும் என நமது படையினருக்கு தெரியும். விழிப்புடன் இருந்து பெரும்பாலான உடுருவல் முயற்சிகளை முறியத்து, எல்லை பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம்.

அதிகமான மக்களிடம் பிரிவினை மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இஸ்லாம் பயன்படுத்தப்படுகிறது என நான் நினைக்கிறேன். இஸ்லாம் பற்றிய சரியான அர்த்தத்தை போதிக்கும் இஸ்லாமிய போதகர்கள் நமக்கு தேவை என நினைக்கிறேன்.

மிக சமீப காலமாக பாக்.,ஆல் பாலாகோட் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. நமது இந்திய விமானப்படையினரால் பாலாகோட் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது உண்மை என்பதையே இது காட்டுகிறது. அதனால் தான் அங்கு மீண்டும் பயங்கரவாதிகள் வந்து பயிற்சியை துவக்கி உள்ளனர் என்றார். இவ்வாறு ராணுவ தலைமை தளபதி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் முகாம்களை மீதும் கட்டி விட்டார்களா?
Rate this:
Cancel
Subramaniyan Balachandran - Chennai,இந்தியா
23-செப்-201917:42:48 IST Report Abuse
Subramaniyan Balachandran பாகிஸ்தான் பாலக்கோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை அமைத்தால் எவ்வித தயக்கமும் இன்றி உள்ளே புகுந்து அவற்றை அழிக்கவேண்டியது நமது கடமை.
Rate this:
Cancel
atara - Pune,இந்தியா
23-செப்-201917:34:56 IST Report Abuse
atara Defense news should not come for public message online. Other than DD News. Since media do all sorts of false comments, This is how their kidney works for the job.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X