பயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம்| Dinamalar

பயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம்

Updated : செப் 23, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (71)
Share
இஸ்லாமாபாத் : இந்தியா பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையிலும், கிண்டல் செய்யும் வகையிலும் டுவிட்டரில் கருத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பாக்., அமைச்சர் பவத் ஹூசைன் சவுத்ரி.அமெரிக்காவில் நேற்று மோடி பங்கேற்ற ஹவ்டி மோடி நிகழ்ச்சியை கிண்டல் செய்து கருத்து பதிவிட்டுள்ளார். ஹவ்டி மோடி நிகழ்ச்சி நடந்த மைதானத்தின் கடைசியில்

இஸ்லாமாபாத் : இந்தியா பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையிலும், கிண்டல் செய்யும் வகையிலும் டுவிட்டரில் கருத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பாக்., அமைச்சர் பவத் ஹூசைன் சவுத்ரி.



latest tamil news


அமெரிக்காவில் நேற்று மோடி பங்கேற்ற ஹவ்டி மோடி நிகழ்ச்சியை கிண்டல் செய்து கருத்து பதிவிட்டுள்ளார். ஹவ்டி மோடி நிகழ்ச்சி நடந்த மைதானத்தின் கடைசியில் காலியாக இருந்த சில இருக்கைகளின் போட்டோவை வெளியிட்ட பவத், " கோடிக்கணக்கான பணம் செலவிட்டும் மோடியின் நிகழ்ச்சியால் எந்த பயனும் இல்லை. அமெரிக்கா, கனடா முழுவதிலும் இருந்து கூட அவர்களால் கூட்டம் சேர்க்க முடியவில்லை. பணத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கி விட முடியாது என்பதையே இது காட்டுகிறது" என பதிவிட்டுள்ளார்.


latest tamil news


பாக்., அமைச்சரின் இந்த கிண்டல் டிவீட்டிற்கு இந்தியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோடி வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோவை வெளியிட்ட பவத், அரங்கிற்குள் மோடி வந்த பிறகு எடுக்கப்பட்ட போட்டோவையும், மோடியை வாழ்த்தி அரங்கம் அதிரும் வகையில் எழுப்பப்பட்ட முழக்கத்தையும் ஏன் பதிவிடவில்லை என கேள்வி எழுப்பி உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X