கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சுபஸ்ரீ விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Updated : செப் 23, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (27)
Advertisement

சென்னை: பேனர் விழுந்து இளம்பெண் பலியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தமிழக அரசு பதலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, பள்ளிக்கரணை அருகே, கடந்த செப்., 12ம் தேதி அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக, சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில், ஒரு பேனர் சரிந்து விழுந்ததில், அவ்வழியே, இருசக்கர வாகனத்தில் சென்ற, குரோம்பேட்டையை சேர்ந்த, தனியார் நிறுவன மென்பொறியாளர், சுபஸ்ரீ, 23, தடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த குடிநீர் லாரி மோதி இறந்தார்.

இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். பேனர் அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக செப்., 13ல் நடந்த விசாரணையில் அதிகாரிகளின் அலட்சியத்தை மேற்கோள் காட்டிய சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தமிழக அரசு மீது சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
நீதிபதிகள் கூறியதாவது: பேனர் விவகாரம் தொடர்பான வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும். அனுமதி அளித்த அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பணியில் கவனக்குறைவாக இருந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடுகிறேன். கமிஷனர் எடுக்கும் நடவடிக்கை குறித்து தலைமைச் செயலர் கண்காணித்து அறிக்கை தர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இன்று (செப்., 23) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ், சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடவடிக்கை எடுக்காதது குறித்து நாளை மறுநாளைக்குள் (செப்., 25) தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
24-செப்-201907:17:40 IST Report Abuse
oce நிலத்தில் கண்டம் வானில் கண்டம் நீரில் கண்டம் நெருப்பில் கண்டம் காற்றில் கண்டம் உடனிருந்தே கொல்பவரால் கண்டம் என பல வகை கண்டங்கள் உள்ளன. மனிதரின் மதி பெரிதல்ல. விதி தான் பெரிது. அந்த விதி வகுத்த வழியை சரியாக அமைத்துக்கொள்வதே சரியான பகுத்தறிவு. மழை வருவது விதி. அதை குடையால் தடுப்பது மதி.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
24-செப்-201907:13:03 IST Report Abuse
oce ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு பகுத்தறிவு இப்படி தான் வேலை செய்யும்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
24-செப்-201907:10:41 IST Report Abuse
oce ஆணாயினும் பெண்ணாயினும் பிறந்தவுடன் அவரவரது ஜாதகத்தை துல்லியமாக கணித்து எதிர்கால வாழ்வின் நல்லது கெட்டதுகள் அபாயங்கள் போன்றவற்றை தெரிந்து வைத்து அதற்கேற்றபடி அவரவர் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். சுபஸ்ரீ மரணம் குறித்து அவரது ஜாதகத்தில் அவரது ஆயுளை கணித்து முன்பே கணித்து பார்த்திருக்க வேண்டும். இந்த அவசர யுகத்தில் மனிதர் இதை எல்லாம் உதாசீனம் செய்து எதிலும் அவசரமாக முன் பின் அறியாமல் அசட்டு தனமாக இயங்குவதால் இது போன்ற அசம்பாவிதங்களை எதிர் கொள்ளுகின்றனர்.
Rate this:
Share this comment
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-செப்-201907:33:37 IST Report Abuse
skv srinivasankrishnaveniஎனக்கு என்றும் எப்போதும் இந்த சாதகம் சோசியம்னாலே அலர்ஜி கண்டுக்கறதே இல்லீங்க நான் தலைவிதியைமட்டுமே நம்பறேன் தினம்தினம் பஞ்சாங்கம் பாத்துண்டு போறதா? தினப்பலன் போடுதே பல தினசரிகள் அண்ட் பல டிவிலேயும் ஏதாச்சும் நடக்குதா இன்று பணவரவு என்று போட்டுருக்கு ம் ஆண்டு வராதுங்க நம்ம பர்ஸ் பிக்பாக்கெட்லே பூடும் மரணம் என்றுபோட்டால் தீர்காயுசா இருப்போம் நம்மால் ஒருகரப்பான் பூச்சிக்கு மரணம் நேரும். அல்லது உறவுகளின் மரண செய்திவரும் ஒருவரேதான் ஒரு ராசிஆர் நக்ஷத்திரத்துலே பிறக்குறாங்களா ? எல்லோருக்கும் எப்படீங்க பொருந்தும்? விருந்தினர் வருகை என்று இருக்கு வரேன் என்று சொன்ன நண்பரும் வரமுடியாத நிலை என்று போன் லே சொல்லிவிடுவார் எல்லாமே சுத்த ஹம்பக் பாரினலே வரேன் என்று சொல்லிட்டுவருவாங்க நம்மூர்லே சொல்லாமலே வரும் விருந்தாளிகள் பாரினலேவறதே இல்லீங்க , திடீர்னு வரும் விருந்தினர்கள் நம்மூர்லே அதிகம் நாமும் வாங்க என்று வரவேற்று உபசரிப்போம் இது தனியாக SPL விருந்தோம்பல்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X