அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் அமைச்சர்

Updated : செப் 24, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (157)
Share
Advertisement

சென்னை: தனது படத்தை ஓட வைக்க நடிகர் விஜய் பரபரப்பாக பேசுகிறார், விஜய் மட்டுமல்ல கவுண்டமணி, செந்தில் கூட கட்சி ஆரம்பிக்கட்டும் என அமைச்சர் ஜெயக்குமார் நக்கலாக கூறினார்.



latest tamil news



பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், தமிழக அரசை மறைமுகமாக விமர்சித்தார். அவர் பேசும்போது, யாரை எங்கே உட்கார வைக்கணுமோ அங்க உட்கார வைக்கணும். பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் பேனரை வைத்தவரை கைது செய்யாமல் அச்சவடித்தவரையும் லாரி டிரைவரையும் கைது செய்துள்ளனர்'' என்றார். இதற்கு தமிழக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், விஜய் பேசியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதிமுக பழுத்த மரம் என்பதால் தான் கல்லடி படுகிறது. அ.தி.மு.க.,வை தொட்டால் தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள். தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பதே வரலாறு. படத்தை ஓட வைக்க வேண்டும் என்பதற்காக எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கிறார்கள். விஜய் மட்டுமல்ல கவுண்டமணி, செந்தில், விவேக் கூட கட்சி ஆரம்பிக்கட்டும். ஆனால் மக்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்'' என்றார்.

‛‛விஜய்யின் படங்கள் வெளிவரும்போதெல்லாம் சர்ச்சைகளும் சேர்ந்தே வரும். தலைவா, கத்தி, மெர்சல், சர்க்கார் போன்ற படங்கள் வெளிவருவதற்கு முன்பு இது தான் நடந்தது. பிரச்னை ஏற்பட்ட பின், அரசுடன் அவர் சமாதானமாக போய், படத்தையும் ரிலீஸ் செய்து விடுவார். இது ஜெயலலிதா முதல்வராக இருந்த காலம் முதல் நடந்து வருகிறது. இப்போதும் அது மாதிரியே செய்கிறார்'' என்று அதிமுக தொண்டர்கள் சிலர் விமர்சிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (157)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-செப்-201911:40:17 IST Report Abuse
Malick Raja ஜெயக்குமார் அமைச்சராய் இருக்கும்போது ,,கவுண்டமணியும் கட்சி ஆரம்பிப்பதே சரியாக இருக்கும் என்று சொல்வதே உண்மையாக இருக்கும் .. ஜோக்கர் ஜெயக்குமார் என்பதும் உண்மைதானே ..
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
24-செப்-201914:32:07 IST Report Abuse
Nallavan Nallavan கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்த ஷர்மிலி கட்சி ஆரம்பித்தால் இந்த செயமே போய்ச் சேர்ந்துகொள்வார் .........
Rate this:
Cancel
Suresh - Chennai,இந்தியா
24-செப்-201910:11:05 IST Report Abuse
Suresh விவேக் லட்ச கணக்கில் மரங்களை நட்டுள்ளார் என்பதை மறந்து விட கூடாது. இதனை விட நல்ல காரியம் செய்தவர்கள் அவரை விமர்ச்சித்தல் ஏற்றுக் கொள்ளலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X