சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலிடெக்னிக் மாணவர் வெட்டிக்கொலை

Updated : செப் 23, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (7)
Advertisement
Murder, கொலை

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர் சந்தையடியூர் தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் அபிமணி. இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இன்று (செப்., 23) கல்லூரிக்கு சென்ற அவர், மதிய உணவு இடைவெளியில் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
செய்துங்கநல்லூர் ரயில்நிலையம் அருகே சென்றபோது ஹெல்மேட் அணிந்த சிலர், அபிமணியை மறித்து சரமாரியாக வெட்டினர். தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் கொலை செய்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-செப்-201906:00:08 IST Report Abuse
meenakshisundaram சமூகக்கட்டுப்பாடு என்று ஒன்று இருக்கையில் அநேகமாக எல்லாமே சரியாதான் நடந்துக்கிட்டு இருந்தது,ஆனா இப்பவோ?சட்டக்கட்டுப்பாடு என்ன செயதுள்ளது,?குற்றங்களை அதிகரிசெய்த்துளது என்பது மறுக்க முடியாத ஒன்று .தானாக பழுக்கும் கனியை அடித்து பழமாக்குவதன் விளைவே .
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Doha,கத்தார்
24-செப்-201917:50:44 IST Report Abuse
Tamilan ஆமா, இந்த 70, ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்து சொர்க்க பூமியாக இருந்தது, அப்படியே அப்ப இருந்தவர்கள் எல்லாம் ஒரு எறும்புக்கு கூட தீங்கு செய்யாத புண்ணியவான்களாக இருந்தார்கலா என்ன? காலம்காலமாக வலியவன் எளியவனை அடக்கி ஒடுக்குவதும், ஒடுங்க மறுத்தால் அழித்து விடுவதுதான் இருந்தது. புராணங்களிலும், இதிகாசங்களிலும் பழிவாங்குதல், அடுத்தவன் பொருட்களை அபகரிப்பது, ஒட்டு மொத்தமாக அழிப்பது தானே இருந்து வருகிறது. இது போன்ற குற்ற செயல்கள் எல்லா இடங்களிலும் நடந்துதான் வருகிறது. வேத நாடு, புண்ணிய பூமி என்று சொல்கிற இந்தியாவில் தான் குற்ற செயல்கள் அதிகம் நடை பெறுகிறது. ஆனால் கடவுள் நம்பிக்கை அற்ற நாத்தீக நாடுகளான Norway, டென்மார்க் போன்ற நாடுகளில் தான் குற்ற செயல்கள் மிகவும் குறைவாக இருக்கிறது. இது தனி மனித ஒழுக்கம் சார்ந்தது, மற்றவர்களையும், சமூகத்தையும் குறை கூறுவதை விட்டு நாம் ஒவொவொருவம் தன்னை போல பிறனையும் நினைத்து செயல்பட்டால் இது போல குற்றங்கள் குறையும்.
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
25-செப்-201908:04:26 IST Report Abuse
கல்யாணராமன் சு.தமிழன், நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன் ........ யாரும் எழுபது வருடத்திற்கு முன்னால் தமிழ்நாடு சொர்க்க பூமியாக இருந்தது என்று சொல்லவில்லை .......... அப்போதும் குற்றங்கள் இருந்தன, கொலை இருந்தது ..... ஆனால் எண்ணிக்கை குறைவாக இருந்தது ......... ஏனெனில் எல்லோருக்கும் ஏதோ ஒன்றை அல்லது ஒருவரை கண்டு பயம் இருந்தது .......... அந்த பயம் அவர்களை, சமூகத்தால் நிர்ணயிக்கப்பட்ட, தவறுகளை செய்ய தயங்க வைத்து ...... அந்த பயம் எல்லோரும் காணும் மனிதர்களிடமோ (பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆட்சியாளர்கள், ஊரில் பெரியவர்கள், நீதிமான்கள், காவலர்கள், படித்தவர்கள், போன்றோர்) அல்லது காணமுடியாத இறைவனிடமோ இருந்தது...... தவறுகள் செய்ய ஆசை இருந்தாலும் பயத்தினால் செய்யவில்லை ........ இந்த பயம் இப்போது யாரிடமும் இல்லை ....... அதன் விளைவுதான் இந்த குற்றங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பு ........... நீங்கள் சொல்லும் நார்வே, டென்மார்க் போன்ற நாடுகளில் எல்லா குற்றங்களும் குறைவல்ல ..........
Rate this:
Share this comment
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
28-செப்-201917:01:46 IST Report Abuse
Sivramkrishnan Gkஇந்தியாவில் உளுத்து போன சட்டம் பல ஓட்டைகளுடன் உள்ளது. மேலும் மனசாட்சியற்ற அரசியல்வாதிகள், காவல்துறையினர், நீதித்துறையினர், அபரிமித பணம்படைத்தவர்கள் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து அநியாயம் செய்கின்றனர்....
Rate this:
Share this comment
Cancel
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
23-செப்-201918:48:22 IST Report Abuse
Sridhar Rengarajan ஆக, எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். என்று உறுதியாக இறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். சீனி சக்கர சித்தப்பா சிலேட்ல எழுதி நக்கப்பா என்று கணிதமேதை ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிடுவார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X