'நீதித் துறை நிர்வாகத்தில் தலையீடு இருக்கக் கூடாது'

Updated : செப் 25, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (20)
Advertisement
'நீதித் துறை நிர்வாகம் தலையீடு இருக்கக் கூடாது'

புதுடில்லி: 'நீதிபதிகள் நியமனம்,பணியிடமாற்றம் ஆகியவை, நீதித் துறை நிர்வாகத்தின் வேராகும்; இதில் தலையீடு இருப்பது முறையல்ல' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, அகில் குரேஷியை, மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கியகொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்தாண்டு, மே மாதம் அனுப்பிய இந்தப் பரிந்துரையின் மீது, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்,உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.இந்நிலையில், நீதிபதி, குரேஷியை, திரிபுரா உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யும்படி, உச்ச நீதிமன்ற கொலீஜியம்,புதிய பரிந்துரையை சமீபத்தில் செய்திருந்தது.
இதையடுத்து, தங்களுடைய மனு மீதான விசாரணையை நிறுத்தி வைக்கும்படி, குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.அதை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், எஸ்.ஏ. பாப்டே, எஸ்.ஏ.நசீர் அடங்கிய அமர்வு ஏற்றுக்கொண்டது. அமர்வு கூறியதாவது:கொலீஜியத்தின் புதிய பரிந்துரை மீது, மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்து, இந்த மனுவின் மீதான விசாரணை நடத்தப்படும்.நீதிபதிகள் நியமனம், பணியிடமாற்றம் உள்ளிட்டவை, நீதித் துறை நிர்வாகத்தின் வேராகும். இதில் மற்றவர்கள் தலையீடு, முறையாக இருக்காது.இவ்வாறு, அமர்வு கூறியது.''தற்போது, பா.ஜ., தலைவராகவும், உள்துறை அமைச்சராகவும் உள்ள அமித் ஷாவை, போலீஸ் காவலில் அனுப்புவதற்கு, நீதிபதி குரேஷி, 2010ல் உத்தரவிட்டார். ''அதனாலேயே, அவருக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுகிறது,'' என, குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், யதின் ஓசா கூறியுள்ளார்.


நீதிபதிகள் பதவியேற்பு



சமீபத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட, நீதிபதிகள், கிருஷ்ண முராரி, எஸ்.ரவீந்திர பட், வி.ராமசுப்பிரமணியன், ரிஷிகேஷ் ராய் ஆகியோர், நேற்று பதவியேற்றனர்.இதன் மூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, 34 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
24-செப்-201922:19:47 IST Report Abuse
K.n. Dhasarathan மத்திய அரசும் கோல்லிஜிம்மும் ஈகோ காட்டி கேவலப்படுத்திறாங்க, கலந்து பேசினாத்தான் சுமுக முடிவு இல்லையெனில் உங்கள் சண்டையை ஜனங்க ரசிப்பாங்க. கருத்து வேறுபாடுகளை ஜனாதிபதியிடம் கொண்டு செல்லுங்கள். இப்படி மத்திய அரசு கேவலமாக மூக்கை நுழைப்பது மக்களிடம் வெறுப்பை உண்டாக்கியது தெரியவில்லையா ?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-செப்-201917:00:45 IST Report Abuse
Endrum Indian ஏற்கனவே அநீதிபதிகள் இப்போ இன்னும் கொஞ்சம் பெரிய லெவெலில் பெட்டி பெட்டியாக அடிக்கலாம் அதற்குத்தான் இந்த செயல்பாடு. ஒவ்வொரு எம் எல் ஏ, எம் பி தேர்தல் மூலமாக மக்களால் என்பது போல இந்த அநீதிபதிகளையும் மக்கள் தேர்ந்தெடுத்தால் தான் அவர்கள் நீதிபதிகளாவர், இல்லைஎன்றால் நீதி கழுதை தேய்ஞ்சி கட்டெறும்பான கதை தான்
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
24-செப்-201916:44:21 IST Report Abuse
ramanathan //தற்போது, பா.ஜ., தலைவராகவும், உள்துறை அமைச்சராகவும் உள்ள அமித் ஷாவை, போலீஸ் காவலில் அனுப்புவதற்கு, நீதிபதி குரேஷி, 2010ல் உத்தரவிட்டார்// மத்திய பிரதேச கொடிய விஷவாயு தாக்குதல்-அதனால் ஏற்ப்பட்ட உயிர்பலிகள். ..கரசேவகர்கள் சாதுக்கள் பயணம் செய்த ரயிலுக்கு இரக்கமின்றி தீயிட்டு கொளுத்ததால் ஏற்ப்பட்ட உயிரிழப்புகள். .இந்திரா மறைவுக்கு பின் நாடெங்கிலும் களவாணி காங்கிரஸ் கட்சி செய்த கொலை வெறி கொலைகள் அதனால் ஏற்ப்பட்ட உயிர்பலிகள் சட்டத்தால் தண்டிக்க முடிந்ததா இதற்கெல்லாம் சட்ட புத்தகத்தை மட்டும் பார்த்து தீர்ப்பு சொல்லும் தலைமை நீதிபதி என்ன பதில் சொல்ல போகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X