அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்., சார்பில் குமரி அனந்தன்?

Updated : செப் 24, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (47)
Share
Advertisement
தமிழக காங்கிரஸ் கட்சியின், முன்னாள் தலைவர், குமரி அனந்தன், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, விருப்ப மனு பெற்றுள்ளார். ஆளுங்கட்சியின் அதிகார பலம் பொருந்திய வேட்பாளருக்கு எதிராக, 87 வயதான குமரி அனந்தனை நிறுத்தி, வேடிக்கை பார்க்க, தமிழக காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம், அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.காலியாக உள்ள, விக்கிரவாண்டி,
நாங்குநேரி, குமரி அனந்தன், போட்டி, காங்கிரஸ், அதிமுக, அ.தி.மு.க., தி.மு.க., திமுக, காங்., தே.மு.தி.க., தேமுதிக,  விக்கிரவாண்டி, ஸ்டாலின், திமுக,

தமிழக காங்கிரஸ் கட்சியின், முன்னாள் தலைவர், குமரி அனந்தன், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, விருப்ப மனு பெற்றுள்ளார். ஆளுங்கட்சியின் அதிகார பலம் பொருந்திய வேட்பாளருக்கு எதிராக, 87 வயதான குமரி அனந்தனை நிறுத்தி, வேடிக்கை பார்க்க, தமிழக காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம், அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

காலியாக உள்ள, விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம், 21ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும், அ.தி.மு.க., நேரடியாக களம் இறங்குகிறது. விக்கிரவாண்டி தொகுதியில், தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ், நாங்குநேரி தொகுதியிலும், அ.தி.மு.க.,வுடன் மோதுகின்றன.


மனு


விக்கிரவாண்டி தொகுதியில், தி.மு.க., இளைஞரணி செயலர், உதயநிதி போட்டியிட வலியுறுத்தி, தி.மு.க., - எம்.பி.,யும், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுமான கவுதமசிகாமணி, நேற்று சென்னை, அறிவாலயத்தில், விருப்ப மனு வழங்கினார். விழுப்புரம் மத்திய மாவட்ட, தி.மு.க., பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணை செயலர், ஜெயசந்திரன், மாவட்ட இலக்கிய அணி தலைவர், ராஜாராமன், முன்னாள், எம்.எல்.ஏ.,வான, ஏ.ஜி.சம்பத் உட்பட, 20க்கும் மேற்பட்டோர், விருப்ப மனுக்கள் பெற்றுள்ளனர்.

தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தலைமையில், அறிவாலயத்தில், இன்று நேர்காணல் நடந்தது. பின்னர், விழுப்புரம் மத்திய மாவட்ட, தி.மு.க., பொருளாளர் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக, காங்., தலைமை அலுவலகமான, சென்னை, சத்தியமூர்த்தி பவனில், நேற்று நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, குமரி அனந்தன், காங்., - எம்.பி., வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் உட்பட, 12 பேர் மனுக்கள் பெற்றுள்ளனர்.


விருப்பம்


ஏற்கனவே, சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டம் ஒன்றில், தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி பேசுகையில், 'நாங்குநேரியில் போட்டியிட, குமரி அனந்தன் விரும்புகிறார். தனக்கு வயதாகி விட்டதாகவும், இளைஞரை நிறுத்தும்படியும் சொல்ல, அவர் முன்வரவில்லை. 'எனவே, அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற எண்ணம், எனக்கு ஏற்படுகிறது' என்றார்.

தேர்தலில் போட்டியிட விரும்பும், குமரி அனந்தனுக்கு, தற்போது, 87 வயதாகிறது, தன், 16வது வயதில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர், தமிழக காங்கிரஸ் செயலர், தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். திருச்செந்துார், ராதாபுரம் தொகுதிகளில், தலா, ஒரு முறை; சாத்தான்குளம் தொகுதியில், இரு முறை என, நான்கு முறை, எம்.எல்.ஏ.,வாகவும், நாகர்கோவில் தொகுதி, எம்.பி.,யாக, ஒரு முறையும் இருந்துள்ளார். பூரண மதுவிலக்கு வேண்டும்; பாரத மாதா கோவில், அணைக்கட்டுகள் கட்ட வேண்டும்;மீனவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும் எனக் கோரி, 16 முறை, பாதயாத்திரை நடத்திஉள்ளார். பனை மரம் பாதுகாப்பு உள்ளிட்ட, பல்வேறு போராட்டங்களை நடத்தி, ஆறேழு முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


கவுரவம்


தமிழக, பா.ஜ., தலைவராக இருந்த, இவரது மகள், தமிழிசைக்கு, கவர்னர் பதவி அளித்து, பா.ஜ., தலைமை கவுரவித்துஉள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தனை கவுரவிக்கும் விதமாக, இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கலாம் என, காங்., கருதுகிறது. அதேநேரத்தில், 'பண பலம், அதிகார பலம் பொருந்திய, ஆளுங்கட்சியின் வேட்பாளருக்கு ஈடுகொடுக்க, மூத்தவர் குமரி அனந்தனால் முடியாது; தேர்தல் செலவுக்கு தேவையான பண பலமும், அவருக்கு இல்லை; ஆளும் கட்சிக்கு இணையாக, அவரால் தேர்தல் செலவு செய்ய முடியாது. 'தோற்று விடுவோம் என்று கருதியே, வயதானவரை நிறுத்துகிறீர்களா?' என, காங்., கோஷ்டிகள் சில, எதிர் கருத்து தெரிவிக்கின்றன.

கடும் போட்டி நிறைந்த களமான, இடைத்தேர்தலில், 87 வயது மூத்தவரை நிறுத்தி, தமிழக காங்கிரஸ் தலைமை வேடிக்கை பார்க்க திட்டமிட்டுள்ளதோ என, அவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.


கூட்டணி துணை நின்றால் வெற்றி!


தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் போட்டியிடும், காங்கிரஸ், தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்கு, கண் துஞ்சாமல், கட்சியினர் உழைக்க வேண்டும். மதச்சார்பற்ற, முற்போக்கு கூட்டணி கட்சியினர் துணை புரிவர் என நம்புகிறேன். அவர்களின் ஒத்துழைப்பின் வாயிலாக, வெற்றிக் கனியை, நம்மால் பறிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரசை விட்டு நீக்கப்பட்டுள்ள, கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாங்குநேரி தொகுதியை, காங்கிரசுக்கு ஒதுக்கிய, ஸ்டாலினுக்கு நன்றி. ஹிந்தி திணிப்புக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போராட்டத்தை ஒத்திவைத்த விவகாரம், கூட்டணிக் கட்சிகளிடம் முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது, 'இதை கருத்தில் வைத்து எடுத்த, ராஜதந்திர முடிவு என சொல்லப்பட்டாலும், காங்., தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. நேரு சொன்னதை போல, மீண்டும் பல்லக்கு துாக்க முன்வந்ததற்கு மகிழ்ச்சி' என, கூறியுள்ளார்.


தே.மு.தி.க.,வுடன் அ.தி.மு.க., பேச்சு


இடைத்தேர்தலில், தே.மு.தி.க., ஆதரவை பெற, அ.தி.மு.க., தலைமை பேச்சு நடத்த துவங்கியுள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு, அக்., 21ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், அ.தி.மு.க.,வை எதிர்த்து, தி.மு.க., - காங்., கட்சிகள் போட்டியிட உள்ளன. அ.தி.மு.க., தரப்பில், வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடக்கிறது. அது மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற, ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்று உள்ளது. இந்த கட்சிக்கு, விழுப்புரம் மாவட்டத்தில் செல்வாக்கு அதிகம். அக்கட்சி ஆதரவு அளித்தால், விக்கிரவாண்டி தொகுதியில், அ.தி.மு.க.,வின் பலம் அதிகரிக்கும். எனவே, தே.மு.தி.க., ஆதரவு பெறும் நடவடிக்கையை, அ.தி.மு.க., தலைமை துவக்கி உள்ளது.

இது தொடர்பாக, விஜயகாந்த் மைத்துனர், சுதீஷ் உடன், அமைச்சர்கள், ஜெயகுமார், வேலுமணி ஆகியோர் ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க.,விற்கு ஆதரவளிப்பது தொடர்பான அறிவிப்பை, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
25-செப்-201909:22:15 IST Report Abuse
krish நிலுவையில் இருப்பதோ ஒன்றரை ஆண்டுகள். குமரி அனந்தன் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர் சீரிய காந்தியவாதி. காமராஜ் கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர். அவரது 87 வது வயதில், அவரை சட்டமன்ற உறுப்பினராக, போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுப்பது , தமிழர்கள் அவருக்கு செய்யும் கெளரவம். நன்றிக்கடன்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24-செப்-201922:19:07 IST Report Abuse
A.George Alphonse இவரு எப்ப MLA வாக ஆகி இந்த தள்ளாதவயதில் மக்களுக்கு சேவை செய்து நல்ல பேரை வாங்க போறாரு.எல்லாமே ஆட்சி சுகம் காணவே.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
24-செப்-201921:35:17 IST Report Abuse
Matt P சட்டசபைக்கு வெட்டி முறிக்கவா போகிறார்கள் . பேச தானே போகிறார்கள் . வயதானவர்களுக்கு பேச்சு நன்றாகவே வரும் . அவர்கள் வாயை மூடுவது தான் கடினம் .இளைஞ்சர்கள் மட்டும் என்ன ..சபை நடுக்கம் காரணமாக இளைய வயதுள்ளவர்கள் வாயை திறப்பதே இல்லை. எல்லோரும் ஏன்பா இவர் வெற்றி பெற்றால் இடை தேர்தல் திரும்பவும் வரும் என்கிறீர்கள்? ,,,ஆரோக்கியமாக இருக்கும் அனந்தன் நூறு வயதுக்கு மேல் வாழலாம் ..மேலும் இவருக்கு குடி பழக்கம் போன்ற கெட்ட பழக்கம் கிடையாது போலிருக்கிறது ..கள்ளு தான் அடிப்பாரோ ..என்னவோ ..பனை மரங்களுக்கு பரிந்து பேசும் இவர். ..ஆரோக்யமில்லாமல் ,வயதை கடந்தும் ஒருவர் வெற்றியும் பெற்று சக்கர நாற்காலியில் அமர்ந்து சட்டசபைக்கு போகாமல் வருமானம் மட்டும் பெற்று கொண்டிருந்தார். அனந்தன் சபைக்கு போவார் ...பேசுவார் என்று நம்பலாம் ...முடியாத மதுவிலக்கையும் தேவை இல்லாத பாரத மாதா கோயிலயும் பேசாமல் இருந்தால் சரி ..மோனே ஆர்டர் formil தமிழ் இடம் பெற செய்தார் . மணியாச்சி ரயில் நிலையத்தின் பெயரை வாஞ்சி மணியாச்சி என்று பெயர் பெற செய்தார். ..அணைக்கட்டுகள் போன்ற மக்கள் நலம் பயக்கும் திட்டங்களுக்காக பேசட்டும் இனிமேலாவது. இவரது மகள் தமிழிசையும் இவரது வெற்றிக்கு மறைமுகமாக-கணவன் வழியாக பணம் செலவழிக்கலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X