அரசியல் செய்தி

தமிழ்நாடு

கனிமொழி மீது வழக்கு: வாபஸ் பெற்றார் தமிழிசை?

Updated : செப் 23, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (17)
Advertisement
வழக்கை வாபஸ் பெற்றார் தமிழிசை ?

சென்னை: துாத்துக்குடி லோக்சபா தேர்தலில், கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடர்ந்த தேர்தல் வழக்கை, வாபஸ் பெற அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழிசை சவுந்தரராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், துாத்துக்குடி தொகுதியில், தி.மு.க., சார்பில், கனிமொழி; பா.ஜ., சார்பில், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் போட்டியிட்டனர்.


நோட்டீஸ்


இந்த தேர்தலில், தமிழிசையை விட, 3.47 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று, கனிமொழி வெற்றி பெற்றார்.கனிமொழி வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழிசை, தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். துாத்துக்குடியைச் சேர்ந்த, சந்தானகுமார் என்பவரும், மனு தாக்கல் செய்தார். இம்மனுக்கள், நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் முன், விசாரணையில் உள்ளன.இந்நிலையில், தெலுங்கானா கவர்னராக, தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்று கொண்டார். தேர்தல் வழக்குகள், நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழிசை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: நான் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கு, விசாரணைக்கு ஏற்கப்பட்டு, எதிர் தரப்பில் பதில் அளிக்க, நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டேன்.


தள்ளி வைத்தார்



அரசியலமைப்பு சட்டப் பதவியில் நியமிக்கப் பட்டிருப்பதால், இந்த தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்தும் உத்தேசம் இல்லை.எனவே, கனிமொழி, எம்.பி.,யின் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட, தேர்தல் வழக்கை வாபஸ் பெற, அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, தேர்தல் வழக்கு வாபஸ் குறித்து, அரசின் அதிகாரப்பூர்வ இதழில் வெளியிடும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை, அக்., 14க்கு, நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் தள்ளி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
24-செப்-201921:51:28 IST Report Abuse
Matt P எனக்கு கிடைக்க வேண்டியது கிடைச்சாச்சு ..நம்ம தங்கச்சி கனியும் சீக்கிரம் பிரதமார்கானும் அதனால் வாபஸ் பெற்று விட்டேன். ஸ்டாலின் அண்ணாவே .....என்க ப்பா வெற்றிக்கு நாங்குனேரியில் தீயா வேலை செய்யணும் .சரியா?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-செப்-201917:02:01 IST Report Abuse
Endrum Indian போதும் என்னை கவர்னர் ஆக்கிட்டாங்க இல்லே, இனி இது எதற்கு???அப்படித்தானே தெலுங்கிசை
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24-செப்-201916:27:14 IST Report Abuse
Nallavan Nallavan வழக்கை வேறு யாராவது நடத்தலாம் ........... காக்காய்க்கு வடைதான் முக்கியம் ........... அநீதியாக எதிரி பெற்ற தேர்தல் வெற்றியைத் தடுப்பது அல்ல என்று புரிந்துகொண்டோம் ..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X