அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரசாந்த் கிஷோருடன் ரஜினி திடீர் சந்திப்பு

Updated : செப் 24, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (40)
Share
Advertisement
நடிகர் ரஜினியும், அரசியல் வியூக நிபுணர், பிரசாந்த் கிஷோரும், மும்பையில் சந்தித்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில், 2021ம் ஆண்டில் நடக்கும், சட்டசபை தேர்தலுக்கு முன், புதிய கட்சி துவங்கி, தீவிர அரசியலில் ஈடுபட ரஜினி திட்டமிட்டுள்ளார். அதற்காக, தன் மக்கள் மன்றத்தை பலப்படுத்தி வருகிறார். லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் வெற்றிக்கு வியூகம் அமைத்து தருவதில், அகில
ரஜினி- அரசியல் வியூக நிபுணர் சந்திப்பு

நடிகர் ரஜினியும், அரசியல் வியூக நிபுணர், பிரசாந்த் கிஷோரும், மும்பையில் சந்தித்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், 2021ம் ஆண்டில் நடக்கும், சட்டசபை தேர்தலுக்கு முன், புதிய கட்சி துவங்கி, தீவிர அரசியலில் ஈடுபட ரஜினி திட்டமிட்டுள்ளார். அதற்காக, தன் மக்கள் மன்றத்தை பலப்படுத்தி வருகிறார். லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் வெற்றிக்கு வியூகம் அமைத்து தருவதில், அகில இந்திய அளவில் பிரபலமானவர், பிரசாந்த் கிஷோர். இவர் தலைமையில் உள்ள நிறுவனம், பல கட்சிகளுக்கு, தேர்தல் வியூகங்களை வகுத்து தந்துள்ளது.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், மத்தியில், பிரதமர் மோடி ஆட்சி அமைக்கவும், பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சி அமைவதற்கும், பிரசாந்த் கிஷோர் காரணமாக இருந்தார். சமீபத்தில் நடந்த, ஆந்திர சட்டசபை தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற, இவர் தான் பின்னணியில் இருந்தார்.
வரும், 2021ம் ஆண்டு, சட்டசபை தேர்தலுக்கு வியூகம் அமைக்க, பிரசாந்த் கிஷோரை, தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சி தலைவர்கள் அணுகியுள்ளனர். குறிப்பாக, முதல்வர், இ.பி.எஸ்., நடிகர் கமல் ஆகியோர், ஏற்கனவே, பிரசாந்த் கிஷோரிடம் பேச்சு நடத்தி உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் மும்பையில், நடிகர் ரஜினியும், பிரசாந்த் கிஷோரும் சந்தித்து பேசியுள்ளனர். இது குறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், அ.தி.மு.க., - தி.மு.க., தலைமைக்கு உள்ள செல்வாக்கு குறித்தும், இருவரும் விவாதித்துள்ளனர். மேலும், தமிழகத்தில் பிரசாந்த் கிஷோர் தரப்பினர் எடுத்துள்ள, சர்வே குறித்தும் பேசப்பட்டு உள்ளது' என்றார். - நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
28-செப்-201921:53:38 IST Report Abuse
A.George Alphonse மந்திரத்தால் மாங்காய் வரவழைக்க ரஜினிகாந்த் முயல்கிறார்.அது இங்கு நிறைவேறாது.வீணாக பகல் கனவு காண்கிறார்.அது கனவாகவே முடியும்.ஒருபோதும்.நிறைவேறாது.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
28-செப்-201905:21:57 IST Report Abuse
oce ரஜினி கட்சி தொடங்க ஆலோசனை செய்வது. முதல் போடாமல் மக்களை ஏமாற்றுவது போல் தெரிகிறது. எம்ஜிஆர் போல், நடிப்பை நிறுத்தி துரிதமாக அரசியலில் இறங்கி மோடிஜியின் கையை தமிழகத்தில் உயர்த்தினால். அவரால் தமிழக மக்களுக்கு ஏராளாமான நன்மைகள் கிடைக்கும்.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
28-செப்-201905:13:51 IST Report Abuse
oce ஊரார் வீட்டு தெரு காம்பவுண்டு சுவர்களில் மக்கள் மன்றம் எழுதிய விளம்பரங்கள் மீதெல்லாம் காக்கா பாட்டு கட்சிக்காரன் போஸ்டர்களை ஒட்டி மறைக்கிறான். ரஜினி முதலில் அதை நிப்பாட்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X