அதிகாரிகள் அலம்பல்; ரேஷன் ஊழியர்கள் புலம்பல்!| Dinamalar

அதிகாரிகள் அலம்பல்; ரேஷன் ஊழியர்கள் புலம்பல்!

Added : செப் 24, 2019
Share
அ ன்றைய தினம் வந்திருந்த நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா. மார்க்கெட் சென்றிருந்த மித்ரா, காய்கறி வாங்கிக்கொண்டு, வீட்டுக்குள் நுழைந்தாள். ''என்னக்கா, நாளிதழ்களில் ஏதாவது விசேஷமா செய்தி பிரசுரம் செஞ்சிருக்கீங்களா? ரொம்ப நேரமா படிச்சிட்டு இருக்கீங்க...'' என, நோண்டினாள் மித்ரா.''ஆமா மித்து, அமெரிக்காவுல, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்
 அதிகாரிகள் அலம்பல்; ரேஷன் ஊழியர்கள் புலம்பல்!

அ ன்றைய தினம் வந்திருந்த நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா. மார்க்கெட் சென்றிருந்த மித்ரா, காய்கறி வாங்கிக்கொண்டு, வீட்டுக்குள் நுழைந்தாள். ''என்னக்கா, நாளிதழ்களில் ஏதாவது விசேஷமா செய்தி பிரசுரம் செஞ்சிருக்கீங்களா? ரொம்ப நேரமா படிச்சிட்டு இருக்கீங்க...'' என, நோண்டினாள் மித்ரா.''ஆமா மித்து, அமெரிக்காவுல, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் கைகோர்த்து, மேடையில் பேசுனாங்களே. அதைதான் படிச்சேன். 'சந்திரயான்-2' விண்கலத்தை வானில் ஏவியபோதும், உலகமே நம் நாட்டை திரும்பி பார்த்தது. இப்போதும், அதே மாதிரி, ஒரே மேடையில் இருவரும் ஒன்னா நின்றதை, மற்ற நாடுகள் கவனிச்சிட்டு இருக்கு...''''அதெல்லாம் இருக்கறதுதானே. நம்மூர்ல உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போறதா சொல்றாங்களே... நடத்துவாங்களா,''''அடுத்த மாச கடைசியில நடத்துறதுக்கு, 'பிளான்' போட்டுருக்காங்க. பீகார்ல இருந்தும், கர்நாடகாவுல இருந்தும் மெஷின் வந்துட்டு இருக்கு. வாக்காளர் பட்டியல், 'பிரிண்ட்' செய்யுற வேலையில, அதிகாரிங்க முழு வீச்சுல செயல்பட்டுட்டு இருக்காங்க.''மேயர் பதவி, 'லேடீஸ்'க்கு ஒதுக்குனதுனால, ஆளுங்கட்சி தரப்புல யாருக்கு கொடுக்கலாம்னு ஆலோசனை நடந்துக்கிட்டு இருக்கு. 'மாஜி' கவுன்சிலர்கள் பலரும், தங்களது மனைவியை களத்தில் இறக்க, காய் நகர்த்திட்டு இருக்காங்க. ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யிடம் முட்டி மோதுறாங்க.''எம்.பி., எலக்சன்ல தோத்ததுனால, எதிர்க்கட்சிக்காரங்க பிரசாரத்தை சமாளிச்சு ஜெயிக்க முடியுமான்னு யோசிச்சு, சிலர் 'ஜகா' வாங்குறாங்களாம். அதனால, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடனும்னு, ஆளுங்கட்சியில, ஒரு 'குரூப்' சொல்லிட்டு இருக்காம்,''''நீங்க சொல்றதை பார்த்தா, கண்டிப்பா தேர்தல் நடத்திருவாங்க போலிருக்கே...''''ஆமாப்பா, உண்மைதான். குறுகிய கால அவகாசத்துக்குள்ள நடத்திடுவாங்களாம். எதிர்க்கட்சி கூட்டணியில, ஒவ்வொரு கட்சிக்கும் 'சீட்' பேசி, பங்கீடு முடிக்கறதுக்குள்ள, தேர்தலை முடிச்சிடணும்னு, 'பிளான்' பண்ணிட்டு இருக்காங்களாம்...''''அப்படியா...?'' என, வாயைப்பிளந்தாள் மித்ரா.''எதிர்க்கட்சிக்காரங்க, வர்ற, 27ம் தேதி, 'பந்த்' போராட்டம் நடத்த ஏற்பாடு செஞ்சிட்டு இருக்காங்களே...''''ஆமாக்கா, கார்ப்பரேஷன்ல சொத்து வரி உயர்த்தியதுக்கும், குடிநீர் வினியோகத்தை தனியார் நிறுவனத்துக்கு கொடுத்ததுக்கும் எதிர்ப்பு தெரிவிச்சு, போராட்டம் நடத்தப் போறாங்க. இதை நீர்த்துப் போகச் செய்றதுக்கு, போலீசும், மாநகராட்சியும் வேலை செஞ்சிட்டு இருக்கு.''போராட்டம் தொடர்பா பிளக்ஸ் பேனர் வைக்க முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கு. போஸ்டர் ஒட்டுனாலும் கிழிக்கிற வேலையில, கார்ப்பரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டுட்டு இருக்காங்க. போஸ்டர் ஒட்டுனா, வழக்கு பதியறதுக்கு போலீஸ் தயாரா இருக்கு,''''அடடே... அப்புறம்...''''குடிநீர் வினியோகத்தை தனியாருக்கு கொடுக்கற திட்டத்தை உருவாக்குனதே, தி.மு.க.,தான்னு, ஆளுங்கட்சி தரப்புல, வெளிப்படையா பேச ஆரம்பிச்சிருக்காங்க,''''அதெல்லாம் சரி, நவக்கரை ஏரியாவுல இருக்கற தி.மு.க., பிரமுகர், 'எஸ்கேப்' ஆயிட்டாராமே...'' என கிளறினாள் சித்ரா.''அதுவா, பெத்த தாயை அடிச்சிட்டு, தலைமறைவாகிட்டாரு. அந்தம்மா, க.க.சாவடி போலீசுல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. இதை காரணம் காட்டி, தி.மு.க., பிரமுகர்ட்ட, எஸ்.எஸ்.ஐ., ஒருத்தரு பேரம் பேசிட்டு இருக்காரு. இன்ஸ்., பெயரை சொல்லி, பணம் பறிக்க முயற்சி நடக்குதாம். இதை கேள்விப்பட்ட இன்ஸ்., நறநறன்னு இருக்காராம்,''''ஆன்-லைன் நடைமுறை வந்தாலும், புரோக்கர் நடமாட்டம் தாங்கலையாமே...'' என, ரூட்டை மாற்றினாள் சித்ரா.''நானும் கேள்விப்பட்டேன். மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்துல புரோக்கர் தலையீடு ஜாஸ்தியா இருக்காம். அதிகாரிகளுக்கு சரிசமமா நேருக்கு நேரா, சேர்ல உட்கார்ந்து பேசுற அளவுக்கு புரோக்கர்களது அதிகாரம் கொடி கட்டி பறக்குறதுனால, லஞ்சமும் தலைதுாக்கி இருக்காம்,''''கண்டக்டரே இல்லாம, ஒரு பஸ் ஓடுச்சாமே...''''அதுவா, பிரஸ் காலனியில இருந்து உக்கடத்துக்கு வந்த பஸ்சுல, கண்டக்டர் ஏறாததை கவனிக்காம, துடியலுார் வரைக்கும் டிரைவர் வந்துட்டாரு. வேறொரு பஸ்சுல கண்டக்டர் பின்தொடர்ந்து வந்து, துடியலுார்ல தடுத்து நிறுத்தியிருக்காரு,''''அப்புறம்... என்னாச்சு?''''அப்புறமென்ன, ரெண்டு பேருக்கும் உயரதிகாரிங்க புத்திமதி சொல்லியிருக்காங்க,'' என்ற மித்ரா, ''ரேஷன் கடை ஊழியர்கள், ஒவ்வொருத்தரும், 10 ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கணும்னு எழுதி வாங்கி இருக்காங்களாமே,'' என, சப்ஜெக்ட்டை மாற்றினாள்.''ஆமாப்பா, கூட்டுறவு சொசைட்டி நடத்துற கடைக்காரங்கள்ட்ட எழுதி, வாங்கியிருக்காங்களாம். ஒவ்வொரு கடையிலும், மாசம் தவறாம, 50 ஆயிரம் ரூபாய்க்கு மளிகை பொருள் வித்துக் கொடுக்கணும்னு கட்டாயப்படுத்துறாங்களாம்.''இதுதவிர, 'அம்மா காய்கறி அங்காடி' நடத்துறதிலும் பிரச்னை ஓடிட்டு இருக்காம். காய்கறி சப்ளை செஞ்சதுக்கு பணம் கட்டலைன்னு, ஊழியர்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பி இருக்காங்களாம்,''''ஆனா, ஒவ்வொரு கடைக்கும் எடை குறைவாதான் பொருள் வருதாமே...''''உண்மைதான், மித்து. மேலிடம் வரைக்கும் கமிஷன் போறதுனால, அதை யாருமே கண்டுக்கறதில்லைன்னு சொல்றாங்க. ரேஷன் கடைக்கு சப்ளையாகுற மூட்டையில, ஒன்றரை கிலோ குறைவா வருதாம். இதுல மட்டும், மாசம் தவறாம, பல லகரம் கைமாறுதாம்...'' என்றபடி, நாளிதழை புரட்டினாள் சித்ரா.'ஸ்மார்ட் சிட்டி' தொடர்பான செய்தி வெளியாகியிருந்தது.அதைப்பார்த்த மித்ரா, ''அதெல்லாம் சரி, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல முறைகேடு நடந்திருக்காமே...'' என்றாள்.''இதுவரைக்கும், ரூ.175 கோடி வரைக்கும் செலவு செஞ்சிருக்காங்க. அரசாங்க அலுவலக சுவத்துல, ஓவியம் வரைஞ்ச வகையில, 11 லட்சம் ரூபாய்க்கு 'கணக்கு' எழுதியிருக்காங்க. டில்லியை சேர்ந்தவங்க, 'ஓசி'யில வரைஞ்சு கொடுத்துட்டு போனாங்க.''இதுமட்டுமல்ல, கவுண்டம்பாளையத்துல சுற்றுச்சுவர் கட்டுனதுக்கு, ரூ.1.22 கோடி செலவானதா, கணக்கு காட்டியிருக்காங்க. ஹாலோ பிளாக் கல்லுல சுவர் கட்டியிருக்காங்க. இதுக்கு இவ்ளோ செலவாகுமான்னு தெரியலை. கார்ப்பரேஷன் தரப்புல, இப்ப, சர்வ சாதாரணமா, கோடிக்கணக்குலதான் செலவழிக்கிறாங்க,''''பாரதியார் பல்கலையில சர்ட்டிபிகேட் கொடுத்தது பத்தி, பேராசிரியர்கள் மத்தியில பரப்பா பேசிக்கிட்டு இருக்காங்களாமே...''''ஆய்வக உதவியாளரா வேலை பார்க்குற ஒருத்தருக்கு, கற்பித்தல் பணியில் ஈடுபட்டதா, அனுபவ சான்று வழங்கியதா சர்ச்சை எழுந்திருக்கு. அந்த சர்ட்டிபிகேட்டை, எந்த சமயத்திலும் பயன்படுத்த மாட்டேன் எழுதி வாங்கியிருக்கலாம்''''எதுக்கு கொடுக்கணும்; ஏன் எழுதி வாங்கணும், குழப்பமா இருக்கே...'' என நோண்டினாள் மித்ரா.''உதவி பேராசிரியரா ஆகணும்னா, அனுபவ சான்று இருக்கணும்னு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு போட்டிருக்கு. அதனால, ஒருத்தரு சர்ட்டிபிகேட் வாங்கியிருக்காரு.''துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் செஞ்சிருக்கிறங்கள்ல ஒருத்தரு, அந்த சர்ட்டிபிகேட்டுல கையெழுத்து போட்டிருக்காரு. அவரை சிக்கல்ல சிக்க விடுறதுக்காக, பிரச்னையை கிளப்பி விட்டுருக்கிறதா, பல்கலை வட்டாரத்துல பேசிக்கிறாங்க. இப்ப, சர்ட்டிபிகேட் கேட்டது உண்மை; ஆனா, கொடுக்கலைன்னு ஒரு தரப்புல சொல்றாங்க,''''பல்கலையிலும் ஏகப்பட்ட பாலிடிக்ஸ் இருக்கும் போலிருக்கே,'' என்ற மித்ரா, ''அரசாங்கத்துக்கு உரிம கட்டணம் கட்டாமலேயே, மதுக்கடை 'பார்' நடத்துறாங்களாமே...'' என, 'ரூட்' மாறினாள்.''டாஸ்மாக் அதிகாரிங்க பலமுறை சொல்லிப் பார்த்தாங்க. பணம் செலுத்தாமலேயே கடை நடத்திட்டு இருக்காங்க. டெண்டர்ல கலந்துக்காம டபாய்ச்சுட்டு இருந்தாங்க. அதனால, 19 கடைகள்ல இருக்கற, 'பார்'களுக்கு 'சீல்' வெச்சு, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்காங்க,''''ஆளுங்கட்சிக்காரங்களுக்கு கரன்சி மழை பொழிஞ்ச இடமாச்சே...'' என்றவாறு, சமையலறைக்குள் நுழைந்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X