சிதம்பரம் தவறு செய்யவில்லை: மன்மோகன் ஆதரவு

Updated : செப் 24, 2019 | Added : செப் 24, 2019 | கருத்துகள் (123)
Advertisement

புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள சிதம்பரத்திற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக வெளிநாட்டு நிதியை பெற உதவியதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அக்., 3ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதால் தற்போது திகார் சிறையில் உள்ளார். காங்., இடைக்கால தலைவர் சோனியா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேற்று (செப்., 23) திகார் சிறையில் உள்ள சிதம்பரத்தை சந்தித்தனர்.
சந்திப்பு முடிந்து மன்மோகன் சிங், சிதம்பரத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், சிதம்பரம் தொடர்ந்து நீதிமன்ற காவலில் சிறையில் இருப்பது கவலையளிக்கிறது. நம் நாட்டின் அரசாங்க முறைகளில் எந்த முடிவையும் தனிநபர் எடுத்துவிட முடியாது. எந்தவொரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் அனைவரிடமும் ஆலோசித்த பிறகு தான் முடிவு எடுக்க முடியும். அப்படி எடுக்கப்படும் முடிவுகள் கோப்புகளில் பதிவு செய்யப்படும்.
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து பரிந்துரைத்த முடிவிற்கு தான் அப்போது அமைச்சராக இருந்த சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார். அப்படி இருக்கையில், முடிவை பரிந்துரைத்த அதிகாரிகள் யாரும் தவறு செய்யவில்லை எனில் அனுமதித்த அமைச்சர் மட்டும் எப்படி தவறு செய்திருப்பார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தகுந்த நீதியை வழங்கும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lotus59 - Belagavi,இந்தியா
30-செப்-201920:46:00 IST Report Abuse
Lotus59 வேலிக்கு ஓணான் சாட்சி அப்படியே சோனியாவையும் சர்டிபிகேட் கொடுக்கச் சொல்ல வேண்டியதுதானே?
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
30-செப்-201918:54:56 IST Report Abuse
Poongavoor Raghupathy Is this Manmohan's wish or his opinion that Chidambaram is not at fault. But 3 judges are not ready to give Anticipatory and regular bails in his charges. This shows that seems to have done some illegal actions.It is a pity for our Nation that educated wealthy people like Chidambaram is falling as a pray to their greedy minds. Though the charges against Chidambaram is to be proved in Court the judges not ready to give bail to Chidambaram is not a good sign for Chidambaram coming out of Court and jail clean.When the going gets tough the tough gets going in Chidambaram's life.This is what our ancestors say that bad times follows with corrupted minds. This is lesson also for Scientific corrupt people.
Rate this:
Share this comment
Cancel
சத்தியம் - Bangalore,இந்தியா
30-செப்-201917:43:55 IST Report Abuse
சத்தியம் மங்குனி சிங்....... புளுக அளவு இல்லையா ......... சிதம்பரம் ஊழல் வாதி மாத்திரம் இல்லை ஒரு தேச துரோகி இர்ஷாத் ஜான் என்ற லஷ்கர் பெண் தீவிரவாதியை அப்பாவி என்று certificate கொடுத்த உத்தம சிகாமணி தானே ...... அவள் தீவிரவாதி என்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிர வாதி டேவிட் ஹெட்லி சொல்லிவிட்டான் ......................................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X