பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும்

Updated : செப் 24, 2019 | Added : செப் 24, 2019 | கருத்துகள் (1)
Advertisement
rain, tamil nadu, TN,  தமிழகம், சென்னை வானிலை ஆய்வு மையம், கனமழை

சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் நிருபர்களை சந்தித்த புவியரசன் கூறியதாவது : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் மழை நீடிக்கும்.

வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில், இன்று (செப்., 24) கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.




மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நாளை(செப்.,25) ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரத்தில் 15 செ.மீ., கள்ளக்குறிச்சியில் 14 செ.மீ., பட்டுக்கோட்டை - 11 செ.மீ., உளூந்தூர்பேட்டையில்- 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

காற்று வலிமையாக இருக்கும் என்பதால், மீனவர்கள் இன்றும் (செப்., 24) நாளையும் மீனவர்கள் குமரி கடல் பகுதி, மாலத்தீவு, தென் தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veerappan Elango - Erode,இந்தியா
24-செப்-201917:43:04 IST Report Abuse
Veerappan Elango மிகப்பெரிய புலையக மாறி 28 -09 -2019 முதல் 30 -09 - 2019 வரை நீடிக்கும் அத்துடன் மிகப்பெரிய பாதிப்பை தமிழகத்துக்கு ஏற்படுத்தும். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும். விவசாயநிலங்கள் பாதிப்படையும் இந்த காலகட்டத்திலும் மீனவர்கள் குமரி கடல் பகுதி, மாலத்தீவு, தென் தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் அரசு உரிய நடவடிக்கையை முன்கூட்டியே எடுப்பது நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X