பாக்., நிருபரை கிண்டல் செய்த டிரம்ப்

Updated : செப் 24, 2019 | Added : செப் 24, 2019 | கருத்துகள் (19)
Advertisement
Donald Trump,Pakisthan,Trump,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப்,பாகிஸ்தான்

நியூயார்க்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, கேள்வி எழுப்பிய, பாகிஸ்தான் பத்திரிகையாளரை, டிரம்ப் கிண்டல் செய்தார்.

அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் , அதிபர் டிரம்ப்பும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது பாகிஸ்தானை சேர்ந்த நிருபர் ஒருவர், காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானை அமைதி நாடு எனவும், இந்தியாவை சண்டை தூண்டும் நாடும் எனவும் குறிப்பிட்டு நீண்ட கேள்வி ஒன்றை எழுப்பினார்.





இதனையடுத்து டிரம்ப், இம்ரான் கானை நோக்கி, '' இவரை போன்ற நிருபர்களை எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள்?'' எனக் கூறியதுடன், அந்த நிருபரிடம் '' நீங்கள் என்ன இம்ரான்கான் குழுவா? நீங்கள் நினைப்பதை எல்லாம் சொல்கிறீர்கள். உங்களது கேள்வி போல் இல்லை. அறிக்கை போல் உள்ளது'' எனக்கூறினார்.

இதனை தொடர்ந்து மற்றொரு நிருபர், டிரம்ப்பிடம், காஷ்மீர் பிரச்னையை தீர்த்தால், உங்களுக்கு நோபல் பரிசு நிச்சயம் என்றார்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், நோபல் பரிசு வழங்குபவர்கள், நேர்மையாக பரிசு வழங்கினால், எனக்கு நிறைய விஷயங்களுக்காக நோபல் பரிசு கிடைக்கும். ஆனால், அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள். ஒன்றை ஒபாமாவிற்கு கொடுத்தனர்...'' என்றார்.
இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
25-செப்-201905:39:05 IST Report Abuse
 nicolethomson சந்துல சிந்து பாடிட்டாரு ஒரு பதிலில் இருவருக்கு தொப்பியும் மாற்றிவிட்டார் , சரி பாகிஸ்தான் நிருபரின் கேள்விக்கு பதில் சொல்லுமுன் அவருக்கு ஒரு கேள்வி , தீவிரவாத சிந்தனையில் உள்ளவனுக்கும், தீவிரவாதிகளுக்கும் ஊரில் பல... என்று ஒரு சொல்லாடல் உண்டு , அது நிஜமா?
Rate this:
Share this comment
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-201904:55:37 IST Report Abuse
Nepolian S என்னவாயினும் அதிபராக இருந்துகொண்டு இப்படி செய்தது சரியன்றோ
Rate this:
Share this comment
Cancel
kathir -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-201902:13:14 IST Report Abuse
kathir well timing
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X