When Trump smacked Pakistani reporters | பாக்., நிருபரை கிண்டல் செய்த டிரம்ப்| Dinamalar

பாக்., நிருபரை கிண்டல் செய்த டிரம்ப்

Updated : செப் 24, 2019 | Added : செப் 24, 2019 | கருத்துகள் (19)
Donald Trump,Pakisthan,Trump,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப்,பாகிஸ்தான்

நியூயார்க்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, கேள்வி எழுப்பிய, பாகிஸ்தான் பத்திரிகையாளரை, டிரம்ப் கிண்டல் செய்தார்.

அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் , அதிபர் டிரம்ப்பும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது பாகிஸ்தானை சேர்ந்த நிருபர் ஒருவர், காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானை அமைதி நாடு எனவும், இந்தியாவை சண்டை தூண்டும் நாடும் எனவும் குறிப்பிட்டு நீண்ட கேள்வி ஒன்றை எழுப்பினார்.





இதனையடுத்து டிரம்ப், இம்ரான் கானை நோக்கி, '' இவரை போன்ற நிருபர்களை எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள்?'' எனக் கூறியதுடன், அந்த நிருபரிடம் '' நீங்கள் என்ன இம்ரான்கான் குழுவா? நீங்கள் நினைப்பதை எல்லாம் சொல்கிறீர்கள். உங்களது கேள்வி போல் இல்லை. அறிக்கை போல் உள்ளது'' எனக்கூறினார்.

இதனை தொடர்ந்து மற்றொரு நிருபர், டிரம்ப்பிடம், காஷ்மீர் பிரச்னையை தீர்த்தால், உங்களுக்கு நோபல் பரிசு நிச்சயம் என்றார்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், நோபல் பரிசு வழங்குபவர்கள், நேர்மையாக பரிசு வழங்கினால், எனக்கு நிறைய விஷயங்களுக்காக நோபல் பரிசு கிடைக்கும். ஆனால், அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள். ஒன்றை ஒபாமாவிற்கு கொடுத்தனர்...'' என்றார்.
இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X