டிரண்டான சசி தரூரின் தவறான பதிவு

Updated : செப் 24, 2019 | Added : செப் 24, 2019 | கருத்துகள் (33)
Advertisement

புதுடில்லி: காங்., மூத்த தலைவர் சசி தரூர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தவறான செய்தி, சமூக தளங்களில் கிண்டலுக்கு உள்ளானது.





காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சசி தரூர், நேற்று (செப்., 23) தனது டுவிட்டர் பதிவில் பெரிய தவறு செய்ததாக சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் நேரு மற்றும் இந்திராவின் போட்டோவை பகிர்ந்து, அதில் இந்திராவின் பெயரை தவறுதலாக குறிப்பிட்டு கேலி கிண்டலுக்கு உள்ளானார்.




சசி தரூர் வெளியிட்டுள்ள பதிவு: எந்தவொரு சிறப்பு மக்கள் தொடர்பு பிரசாரம், வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்ட மேலாண்மை அல்லது மிகைப்படுத்தப்பட்ட ஊடக விளம்பரம் இல்லாமல், 1954ம் ஆண்டில் நேரு மற்றும் இந்திரா அமெரிக்கா சென்றபோது அங்குள்ள மக்கள் தந்த உற்சாகமான தன்னிச்சையான வரவேற்பை பாருங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.




அவர் குறிப்பிட்ட புகைப்படம் 1954ல் மாஸ்கோவில் எடுக்கப்பட்டது என்றும், இந்திரா என்பதற்கு பதிலாக இந்தியா என்றும் அதை தவறுதலாக குறிப்பிட்டது தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. அதுவும் காங்., கட்சியின் மூத்த தலைவராக இருந்து கொண்டு இந்திரா பெயரையும், அவர் பங்கேற்ற நாட்டை பற்றியும் கூட அறியாமல் இப்படி தவறுதலாக குறிப்பிட்டது, நெட்டிசன்களிடையே கேலிக்குள்ளானது மட்டுமல்லாமல் டுவிட்டரில் டிரண்டும் ஆனது.






சசி தரூர் விளக்கம்

இது தொடர்பாக சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார். அதில், எனக்கு அனுப்பப்பட்ட இந்த படம், சோவியத் ஒன்றியத்திற்கு வருகை தந்த போது என நினைக்கிறேன். ஆனால் அமெரிக்கா அல்ல. அப்படியிருந்தும், இன்னும் செய்தியை மாற்றவில்லை. உண்மை என்னவென்றால், முன்னாள் பிரதமர்களும் வெளிநாடுகளுக்கு சென்ற போது பிரபலமடைந்துள்ளனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடியும் பெருமையடைந்துள்ளார். இந்தியாவுக்கு மரியாதை. இவ்வாறு சசி தரூர் விளக்கமளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
24-செப்-201923:21:22 IST Report Abuse
TamilArasan அன்றே அமெரிக்காவிடம் நட்ப்பு பாராட்டி இருந்தால் இந்தியாவின் தலையெழுத்தே மாறி இருக்கும் - இத்துப்போன கம்யூனிச ரசியா அமெரிக்காவிற்கு எதிராய் நம்மை கொம்பு சீவி விட்டு வேடிக்கை பார்த்ததுதான் மிச்சம் - அது மட்டும் இல்லை தங்களின் தரமற்ற பொருட்ட்களை சந்தைப்படுத்தும் ஒரு நாடகத்தான் இந்தியாவை ரசியா பயன் படுத்தியது - மேலும் சகோதரனுக்கு இணையான நடப்பு என்று கூறியதோடு சரி தங்கள் நாட்டில் வந்து இந்தியர்கள் படிக்கவோ அல்லது வேலைக்கு செல்லவோ அனுமதி கொடுக்கவில்லை... ரசியா நம்மளை பயன்படுத்தியதற்கு உதாரணம் சேலம் மாநகராட்சியை சாலைகளில் குவிந்து கிடைக்கும் ஐஸ் அள்ளும் வாகனத்தை வாங்க வைத்தது போன்றவைதான் - மக்களை மிரட்டி மாஸ்கோ சாலைகளில் நிற்க வைத்து ரசியா கொடுத்த மரியாதையை பார்த்து மிரண்டு போன நேரு நம் நாட்டை ரசியவிடம் அடகு வைத்ததுதான் மிச்சம் - இன்று வரை நாம் ரசியவிடம் வாங்குகிறோம் அவர்கள் நமக்கு விற்கிறார்கள் - ஆனால் நாம் அமெரிக்காவிற்கு ஆண்டிற்கு பல லட்சம் கோடி அளவிலான பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம் மேலும் பல லட்சம் கோடி அளவிற்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் நம் நாட்டிற்கு பணம் அனுப்புகிறார்கள், இப்படி அமெரிக்காவால் நம் நாட்டிற்கான பலன்கள் பல கூறலாம்...
Rate this:
Share this comment
Cancel
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
24-செப்-201919:57:51 IST Report Abuse
orange mittai Newton Vs India...சரியாப்போச்சு கணக்கு...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
24-செப்-201919:13:06 IST Report Abuse
K.Sugavanam அடப்பாவமே.ஊத்தி மூடுறாங்க பாருங்க.ஒரு வார்த்தை விட்டு போனதற்கும் வருடம் மாறியதற்கும்,நாடு மாறியதற்கும்..இடுகை இடும்போது மிக கவனமாக இருக்கவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X