புதுடில்லி, நாடு முழுவதும்தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டபோது எண்ணற்ற மரங்கள் வெட்டப்
பட்டன. இதற்குப் பதிலாக புதிய மரங்களை சாலை ஓரங்களில் நட்டு பராமரிக்க உறுதி எடுக்கப்பட்டது.
ஆனால் சென்டர் மீடியன்களின் அகலம் 12 அடி வரையில் இருந்தால் மட்டுமே அவற்றில் மரங்களை நட்டு வளர்க்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் தர்மபுரி தொகுதி எம்.பி.யான செந்தில் குமார் இப்பிரச்னை குறித்து டில்லியில் மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அதில் சென்டர் மீடியன்களின் அகலம் 12 அடி இருக்க வேண்டுமென்பதை குறைத்து 5 அடியாக திருத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தர்மபுரி தொகுதியில் யூகலிப்டஸ் மரங்களை நட்டு வளர்ப்பதற்கு செந்தில் குமார் எம்.பி.க்கு அனுமதி வழங்கியுள்ளார்.