ஊக்க சக்தி 'காந்தி': பிரதமர் மோடி புகழாரம்

Updated : செப் 25, 2019 | Added : செப் 25, 2019 | கருத்துகள் (14)
Advertisement
#UNGA,மோடி,Modi,Gandhi,காந்தி,UN,ஐ.நா

நியூயார்க்: 'மகாத்மா காந்தியின் வாழ்க்கை, அனைவருக்கும் ஊக்கமும், உத்வேகமும் அளிக்கக்கூடியது' என பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார்.





பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் உள்ளிட்ட தலைவர்கள், அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள ஐ.நா., தலைமையகத்தில், காந்தி சோலார் பூங்காவை திறந்து வைத்தனர். தொடர்ந்து மகாத்மா காந்திக்கு சிறப்பு அஞ்சல் தலையையும் வெளியிட்டனர்.





நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாடப்படும் வேளையில், அவருக்கு அமெரிக்காவில் சிறப்பு தபால் தலையை வெளியிடும் வாய்ப்பினை எனக்கு வழங்கிய ஐ.நா., சபைக்கு, நன்றி. காந்தியை சந்திக்காமல் வாழும் அனைவருக்குமே, அவர் ஊக்க சக்தியாக இருக்கிறார். மகாத்மா காந்தியின் கொள்கைகளே, மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் நெல்சன் மண்டேலாவின் கொள்கைகள், சித்தாந்தங்களுக்கு அடிப்படை. அவரது வாழ்க்கை உத்வேகம் அளிக்கக்கூடியது. நாம் அடுத்தவர்களை கவர்வது எப்படி என வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், 'எப்படி ஊக்குவிப்பது' என வாழ்ந்தவர் காந்தி அவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.





இவரை தொடர்ந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசியதாவது: மகாத்மா காந்தி உண்மையான துறவி, அரசியல் மேதை மற்றும் துறவியாக வாழ்ந்து, மனித குலத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், இருளில் ஒளியாகவும் இருந்தார். இவ்வாறு அவர் பேசினார்.




Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
30-செப்-201919:12:39 IST Report Abuse
kowsik Rishi பெரும்பவத்திற்கு பாதகத்திற்கு துணை போகும் நீங்கள் தான் மன நிலை தவறியவர்கள் இந்தியா இப்படி ஒரு நிலைக்கு வருந்துகிறேன்
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி இந்த ஆர்.எஸ். எஸ் என்றுமே காந்திஜீயுடனேயே தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட இயக்கம். சுதந்திரமடையும் சமயத்தில் நேரு ஜின்னா இரண்டு சுயநலவாதிகளால் இந்தியா இரண்டாக பிரிந்தது. இப்படி பல உயிர்த்தியாகம் செய்து சுதந்திரம் அடையும் சமயத்தில் அந்த இரண்டு சுயநலவாதிகளை அவர் தடுக்கமுடியாமல் காந்தி அதற்கு நேருவுடன் சேர்த்து ஆதரவு கொடுத்ததால் ஆர்.எஸ்.எஸ் என்ற இந்திய தேச பக்தி இயக்கம் அவருடன் கருத்து வேறு கொண்டது. இந்த ஆர்.எஸ். எஸ் சுதந்திரத்திற்கு எதிரானது என்பதெல்லாம் நேரு தனது சுயநலத்திற்காக கையில் எடுத்த ஆயுதம். அதை வைத்து தான் 2014 வரை இந்த நேரு குடும்பம் இந்தியாவை கொள்ளையடித்தது. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே.
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-201914:43:28 IST Report Abuse
RM Then why didnot Modiji take action against his party member who make a Gandhijis figure and shoot it.வக்கிரமான செயல். very pain ful.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X