சரத்பவார் மீது பணமோசடி வழக்கு| Dinamalar

சரத்பவார் மீது பணமோசடி வழக்கு

Updated : செப் 25, 2019 | Added : செப் 25, 2019 | கருத்துகள் (75)
சரத் பவார், பணமோசடி வழக்கு, அமலாக்கத்துறை, கூட்டுறவு வங்கி, தேசியவாத காங்., மகாராஷ்டிரா, சட்டசபை தேர்தல்

புதுடில்லி: தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், 78, அவரது உறவினரும், மஹாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வருமான, அஜித் பவார் ஆகியோர் மீது, அமலாக்க துறை அதிகாரிகள், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மஹாராஷ்டிராவில், செயல்பட்டு வரும், மஹாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில், 2007 - 11 காலத்தில், கடன் வழங்கியது உள்ளிட்ட விஷயங்களில், 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக, அம்மாநில போலீசார், சமீபத்தில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த ஊழலில், சட்டவிரோத பணப் பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாகவும், இதில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், அவரது உறவினரும், மஹாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வருமான, அஜித் பவார் உள்ளிட்டோர் மீது, அமலாக்க துறை அதிகாரிகள், நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.





மஹாராஷ்டிராவில், அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சரத் பவார், அஜித் பவார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி சரத்பாவர் கூறுகையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைக்கு செல்வதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. சிறைக்கு செல்லும் அனுபவத்தை எனக்கு தந்து விட வேண்டாம் என கேட்பேன். ஒருவேளை என்னை சிறைக்கு அனுப்ப சிலர் திட்டமிட்டால், அதை நான் வரவேற்பேன் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X