பொது செய்தி

இந்தியா

மோடி, தோவலுக்கு குறி: தயார் நிலையில் பயங்கரவாதிகள்

Updated : செப் 25, 2019 | Added : செப் 25, 2019 | கருத்துகள் (67)
Share
Advertisement
புதுடில்லி : பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தாக்குவதற்கு சிறப்பு பயிற்சி பெற்ற பயங்கரவாத குழுவை அனுப்ப ஜெய்சி இ முகம்மது தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாக்., உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து

புதுடில்லி : பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தாக்குவதற்கு சிறப்பு பயிற்சி பெற்ற பயங்கரவாத குழுவை அனுப்ப ஜெய்சி இ முகம்மது தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.latest tamil newsகாஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாக்., உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் பெரிய தாக்குதலை நடத்த வேண்டும் என ஜெய்ஷி இ முகம்மது இயக்க தலைவர் ஷம்ஷர் வானி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர காஷ்மீர், அமிர்தசரஸ், பதன்கோட், காந்திநகர், கான்பூர், லக்னோ உள்ளிட்ட 30 நகரங்களில் தாக்குதல் நடத்தப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news


விமானப்படை தளங்களை தாக்க பயங்கரவாதிகளை திட்டமிட்டுள்ளதாக விடுக்கப்பட்ட மிரட்டலை தொடர்ந்து பிரதமர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை தாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. பாலகோட் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவைகளுக்கு பதில் நடவடிக்கையாக இந்த தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
25-செப்-201921:37:43 IST Report Abuse
Nallavan Nallavan களையெடுங்கள் .....
Rate this:
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
26-செப்-201917:34:12 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் எந்த வயலில்?...
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
25-செப்-201919:43:05 IST Report Abuse
venkatan Why these type of secret warnings aired to public..You should be clever and advance to strike,once spotted the enemies congregation.every thing should be kept confidence and to attack surprisingly.
Rate this:
Cancel
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
25-செப்-201918:30:01 IST Report Abuse
orange mittai வெள்ளை கொடிகாரனுங்க முதல்ல வெள்ள கொடி ஒரு புல்ல புடுங்கிட்டு போங்கடா பார்போம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X