டிரெண்டிங் 'செல்பி பாய்': தினமலருக்கு சிறப்பு பேட்டி

Updated : செப் 25, 2019 | Added : செப் 25, 2019 | கருத்துகள் (24)
Advertisement

ஹூஸ்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்களுடனான, 'ஹவுடி மோடி ' நிகழ்ச்சி அரங்கின் மேடையில். இந்திய சிறுவன் எடுத்த செல்பி படம், ஊடகங்களில் பரவி, டிரெண்டிங் ஆனது. இந்த புகைப்படத்தை மோடியும், வெள்ளை மாளிகையும் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து, அந்த சிறுவன் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது.

கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடகா மாவட்டம், சிர்ஸி எனும் இடத்தை சேர்ந்தவர் பிரபாகர் ஹெக்டே. தகவல் தொழில்நுட்பத் துறை இன்ஜினியர். இவரது மகன் சாத்விக் ஹெக்டே, 13. அமெரிக்காவில் சான் அன்டோனியா நகரில் உள்ள லுாயிஸ் டி பிராண்டிஸ் உயர்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். உலக அளவில் பிரபலமான 'செல்பி பாய்' பிரபாகர் ஹெக்டே உடன் நமது செய்தியாளர் ஷீலா ரமணன் நடத்திய சிறப்பு நேர்காணல் இதோ...

* என்ன படிக்கிறீர்கள்?
ஒன்பதாவது கிரேடு படிக்கிறேன்.

* மேடையில் என்ன நிகழ்ச்சியில் பங்கேற்றீர்கள்? எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது?
யோகா, சூரிய நமஸ்காரம் செய்தேன். மோடி மற்றும் டிரம்பை வரவேற்பதற்காக எங்கள் ஆசிரியர் உடனான குழுவினர் காத்திருந்த போது மோடி மற்றும் டிரம்ப்பை சந்தித்து, செல்பி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

* எத்தனை பேர் அவர்களை வரவேற்க இருந்தீர்கள்?
எங்கள் குழுவில் 10 பேர் இருந்தோம். நடனக் குழுவை சேர்ந்த 5 பேர் அங்கு இருந்தோம்.

* உலகின் பெரிய தலைவர்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?
இருவரும் உலகின் மிக சக்தி வாய்ந்த தலைவர்கள். அவர்களை மிக அருகில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என தோன்றியது.

* உங்களுக்கு பயமாக இல்லையா?
பாதுகாப்பு காரணங்களால் பதற்றமாகவும், சிறிது பயமாக இருந்தது. இருந்தும் அவர்களிடம் செல்பி எடுத்துக் கொள்ளலாமா என கேட்டேன்.

* செல்பி எடுக்கலாமா என கேட்டதற்கு அவர்கள் என்ன செய்தனர் ?
அதற்கென்ன தாராளமாக என டிரம்ப் கூறினார். பிரதமர் மோடியிடம் கேட்டதற்கு, அவர் சிரித்துக் கொண்டே சம்மதம் தெரிவித்து விட்டார்.

* அவர்களுடன் செல்பி எடுத்த போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. வாழ்நாளில் ஒருமுறை தான் கிடைக்கும் வாய்ப்பு என்பதால் மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு பிரபாகர் ஹெக்டே கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-201901:18:21 IST Report Abuse
Ganesan Madurai வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-செப்-201900:18:42 IST Report Abuse
Pugazh V I still wonder as to, how this boy was allowed to carry mobile in the function???
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-செப்-201900:17:47 IST Report Abuse
Pugazh V Any body wanted photos with mo__, trump, abdulkalam or even gandhi. Rs.500 per copy. With photoshop software this is very very easy. There's a video where mo__ and Trump dances and plays drum for "jimikki kammal song".
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X