தேசிய ஒருமைப்பாடு விருது: மத்திய அரசு அறிமுகம்

Updated : செப் 25, 2019 | Added : செப் 25, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி: மத்திய அரசு, சர்தார் வல்லபாய் படேல் பெயரில் குடிமகனுக்கான உயரிய தேசிய ஒருமைப்பாடு விருதை அறிமுகப்படுத்தியுள்ளது.





தேசிய ஒற்றுமைக்காக பாடுபடுவோரை கவுரவிக்கும் வகையில் சர்தார் வல்லபாய் படேல் பெயரில் ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருது பெறுபவருக்கு ஒரு பதக்கமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். பெரும்பாலும் உயிரோடு இருப்பவர்களுக்கு தரப்படும். தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு அளித்தவர்கள். இந்தியாவின் உயர்ந்த மதிப்புகளையும், ஒற்றுமையையும் காத்தவர்கள், இந்த விருதுக்கு தகுதியானவர்கள்.

தேசிய ஒற்றுமைக்காக பாடுபடுவோரை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018ம் ஆண்டு, டிச.18ல் அறிவித்தார். அது தொடர்பாக இன்று (செப்., 25) மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:

சர்தார் வல்லபாய் படேல் பெயரில் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்காக உழைத்தவர்களுக்கு 'சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒருமைப்பாடு விருது' வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. விருது பெறுபவருக்கு ஒரு பதக்கமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். பெரும்பாலும் உயிரோடு இருப்பவர்களுக்கு தரப்படும்.




இந்த விருதோடு எந்த விதமான பணமுடிப்பும் தரப்படாது. ஒரு ஆண்டில் அதிகபட்சம் 3 விருதுகள் மட்டுமே வழங்கப்படும். சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான அக்., 31ம் தேதி, தேசிய ஒற்றுமை நாளில் முதல் விருதை பெறுபவர்கள் குறித்த அறிவிக்கப்படும்.
தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு அளித்தவர்கள், இந்தியாவின் உயர்ந்த மதிப்புகளையும், ஒற்றுமையையும் காத்தவர்கள் இந்த விருதுக்கு தகுதியானவர்கள். இந்த விருது ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கப்படும் நாளில், ஜனாதிபதியால் வழங்கப்படும்.




இந்த விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், அமைச்சரவைச் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர், ஜனாதிபதியின் செயலர், உள்துறைச் செயலர், பிரதமரால் தேர்வு செய்யப்படும் 4 பிரபலமானவர்கள் ஆகியோர் இடம்பெறுவர்.
இந்த விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த எந்த குடிமகனும், நிறுவனமும், அமைப்பும் மற்றொரு தனிமனிதரைப் பரிந்துரை செய்யலாம். தனிமனிதர்களும் தங்களை விருதுக்கு பரிந்துரைத்துக்கொள்ள முடியும். மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், அமைச்சகங்கள் ஆகியவையும் விருதுக்கான பரிந்துரைகளை செய்யலாம்.




ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுக்கான பரிந்துரைகள் ஏற்கப்படும். இந்த விருதுக்கான விண்ணப்பங்கள், இதற்காக உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள இணையதளத்தில் இருக்கும். அனைத்து குடிமக்களும் சாதி, மதம், இனம், பாலினம், பிறப்பிடம், வயது, தொழில் என பாகுபாடு இல்லாமல் இந்த விருதுக்குத் தகுதயானவர்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Chennai,இந்தியா
25-செப்-201920:13:34 IST Report Abuse
Kannan இந்த விருதுக்கு தகுதியில்லாத கட்சி நம்ம சுடலை கட்சி. சீமான், வைகோ, திருமா, மணி ஷங்கர் ஐயர், பப்பு, மம்தா, டிக் விஜய் சிங்க், போன்ற பல நபர்கள்.
Rate this:
Share this comment
Cancel
25-செப்-201919:35:54 IST Report Abuse
நக்கல் இது நல்ல விருது... இதே போல தேசிய பிரிவினைவாத விருதுன்னு சொல்லி வருஷத்துக்கு பத்து தலைவர்களை உள்ள வெச்சு முட்டிக்கு முட்டி தட்டணும்... தமிழ்நாட்டுல அதிக பேருக்கு இந்த விருது கிடைக்க வழி பண்ணனும்...
Rate this:
Share this comment
Cancel
P.Prabhakar Raj - Nagercoil Now @ Kuwait,குவைத்
25-செப்-201917:14:39 IST Report Abuse
P.Prabhakar Raj பதக்கத்தின் வடிவம் தாமரை இலையில் தாமரை பூ? இது மத்திய அரசு பதக்கமா? இல்லை பி ஜே பி- இன் பதக்கமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X