பொது செய்தி

இந்தியா

ஐ.என்.எஸ்., துணைதலைவராக தினமலர் ஆதிமூலம் தேர்வு

Updated : செப் 26, 2019 | Added : செப் 25, 2019 | கருத்துகள் (32)
Advertisement
ஐ.என்.எஸ்., துணைதலைவர், தினமலர், ஆதிமூலம், தேர்வு

பெங்களூரு :ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய செய்தித்தாள் நிறுவனத்தின், துணை தலைவராக, 'தினமலர்' கோவை பதிப்பு வெளியீட்டாளர், எல்.ஆதிமூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய செய்தித்தாள் நிறுவனத்தின், 80வது ஆண்டு பொதுக் குழு கூட்டம், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில், நேற்று நடந்தது. இதில், 2019 - 20ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள், தேர்வு செய்யப்பட்டனர்.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, 'மிட் - டே' நாளிதழின் சைலேஷ் குப்தா, தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.'தினமலர்' கோவை பதிப்பு வெளியீட்டாளர், எல்.ஆதிமூலம், துணை தலைவராகவும், 'ஆனந்த் பசார் பத்திரிகா'வின் புர்காயஸ்தா, உப தலைவராகவும், 'சண்டே ஸ்டேட்ஸ்மேன்' பத்திரிகையின் நரேஷ் மோகன், கவுரவ பொருளாளராகவும், மேரி பால், பொது செயலராகவும் தேர்வாகி உள்ளனர்.


------------------------------------------- ஐ என் எஸ் னா இண்டியன் நியூஸ்பேப்பர் சொசைட்டி. இந்திய செய்தித்தாள் சங்கம். அதோட டெபுடி ப்ரெசிடென்டா தினமலர் கோவை பதிப்பாளர் எல். ஆதிமூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஹெல்த் & தி ஆன்டிசெப்டிக் (Health & Antiseptic) பத்திரிகையோட பதிப்பாளரும் கூட. மிட் டே (Mid-Day) பத்திரிகைய சேர்ந்த ஷைலேஷ் குப்தா தலைவரா தேர்ந்தெடுக்கப்பட்ருக்கார். தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் ஆர். லட்சுமிபதி ஐ என் எஸ் செயற்குழு உறுப்பினரா தேர்வாகி இருக்கார். அசரீரி: மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்





மேலும், 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர், டாக்டர். ஆர்.லட்சுமிபதி, 'தினத்தந்தி' நிர்வாக இயக்குனர், பாலசுப்ரமணியம் ஆதித்தன், 'மலையாள மனோரமா'வின் ஜெயந்த் மேமன் மாத்யூ உட்பட, 41 பேர், நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Balasubramanian - Chennai,டிரினிடட்&டோபாகோ
26-செப்-201915:38:51 IST Report Abuse
Ramesh Balasubramanian பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
Rate this:
Share this comment
Cancel
Naren - Chennai,இந்தியா
26-செப்-201915:11:27 IST Report Abuse
Naren தினமலர் வெளியீட்டாளர் திரு. ஆதிமூலம் அவர்கள் இந்திய செய்திதாள் சம்மேளனத்தின் உதவித் தலைவராக தேர்தெடுக்கப் பட்டுள்ளது வரவேற்க தக்கது. இது தமிழர்களுக்கு கிடைத்த வெகுமானம். இனி இந்திய செய்திதாள்களில் நெறி படுத்துவதில் அவரது சேவை பரந்து விரிந்து இந்திய அளவில் இருக்கப் போவதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாசகர்களில் ஒருவனாய் அவருக்கு எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
KSK - Coimbatore,இந்தியா
26-செப்-201913:56:11 IST Report Abuse
KSK நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல மக்களிடம் உண்மைகளை துரிதமாகவும் துணிவாகவும் உரைக்கும் உங்கள் உயர்வான நேர்மையான பணிகள் மென்மேலும் சிறக்கவும், தகவல் நுட்ப புரட்சியின் தாக்கத்தால் வேகமாக மாறி வரும் பத்திரிக்கை துறையில் புதிய சிகரங்களையும், உயரங்களையும் தினமலர் தொடவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். வலுவான ஜனநாயக தூணாக இருந்து நாட்டை நாசமாக்கும் தீய சக்திகளை தொடர்ந்து அடையாளப்படுத்தி தேசத்தை உயர்த்தி மக்களுக்கு சீரிய சேவை செய்து வரும் தங்கள் மகத்தான பணிகள் இந்த புதிய பொறுப்புகள் மூலம் மென்மேலும் வளரட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X