ஐ.என்.எஸ்., துணைதலைவராக தினமலர் ஆதிமூலம் தேர்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஐ.என்.எஸ்., துணைதலைவராக தினமலர் ஆதிமூலம் தேர்வு

Updated : செப் 26, 2019 | Added : செப் 25, 2019 | கருத்துகள் (32)
ஐ.என்.எஸ்., துணைதலைவர், தினமலர், ஆதிமூலம், தேர்வு

பெங்களூரு :ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய செய்தித்தாள் நிறுவனத்தின், துணை தலைவராக, 'தினமலர்' கோவை பதிப்பு வெளியீட்டாளர், எல்.ஆதிமூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய செய்தித்தாள் நிறுவனத்தின், 80வது ஆண்டு பொதுக் குழு கூட்டம், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில், நேற்று நடந்தது. இதில், 2019 - 20ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள், தேர்வு செய்யப்பட்டனர்.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, 'மிட் - டே' நாளிதழின் சைலேஷ் குப்தா, தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.'தினமலர்' கோவை பதிப்பு வெளியீட்டாளர், எல்.ஆதிமூலம், துணை தலைவராகவும், 'ஆனந்த் பசார் பத்திரிகா'வின் புர்காயஸ்தா, உப தலைவராகவும், 'சண்டே ஸ்டேட்ஸ்மேன்' பத்திரிகையின் நரேஷ் மோகன், கவுரவ பொருளாளராகவும், மேரி பால், பொது செயலராகவும் தேர்வாகி உள்ளனர்.






மேலும், 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர், டாக்டர். ஆர்.லட்சுமிபதி, 'தினத்தந்தி' நிர்வாக இயக்குனர், பாலசுப்ரமணியம் ஆதித்தன், 'மலையாள மனோரமா'வின் ஜெயந்த் மேமன் மாத்யூ உட்பட, 41 பேர், நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X