இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்: மோடி அழைப்பு

Updated : செப் 25, 2019 | Added : செப் 25, 2019 | கருத்துகள் (15)
Advertisement
முதலீடு, இந்தியா, பிரதமர் மோடி,

நியூயார்க்: இந்தியாவில் முதலீடு என்பது பாதுகாப்பானது. முதலீட்டாளர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. முதலீடு செய்ய இந்தியா வாருங்கள் என பிரதமர் மோடி கூறினார்.

சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: அதிகவேக வளர்ச்சி பெறுவதற்கான பணியில் இந்தியா தனித்துவமாக உள்ளது. காலாவதியான சட்டத்தை நீக்கியுள்ளோம். இதுதான் ஆரரம்பம, நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.
வறுமையிலிருந்து இந்திய மக்கள் மீண்டு வருகின்றனர். ‛ஆப்' பொருளாதாரத்தை, இந்திய இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற்றதாக இந்தியா மாறியுள்ளது. சட்டங்கள் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளன

உள்கட்டமைப்பில் 1.3 டிரில்லயன் டாலர் முதலீடு செய்யப்பட உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள் வேகமாக மேம்படுத்தப்படுகிறது. முதலீடுக்கு ஏற்றதாக உள்கட்டமைப்பு உள்ளது.கார்ப்பரேட் வரி குறைப்பு என்ற புரட்சிகரமான முடிவை எடுத்துள்ளோம். இது வர்த்தகத்திற்கு சாதகமாக உள்ளது.இந்தியர்கள் பொருளாதாரத்தில் முன்னேறி வருகின்றனர்

வளர்ச்சியே எங்களின் முக்கிய இலக்கு. மேக் இன் இந்தியாவில் இடம்பெற இந்தியா வாருங்கள். 'ஸ்டார்ட் ஆப்' பில் முதலீடு செய்ய இந்தியா வாருங்கள். இந்தியாவில் முதலீடு என்பது பாதுகாப்பானது. சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் பெரிய வாய்ப்புகள் உள்ளன. முதலீடுகள் அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம்.எளிதாக தொழில் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது .இந்தியாவில் பெரிய சந்தைகள் வருவதை விரும்புகிறோம். முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு 50 சதவீதம் அதிகரித்துள்ளது
5 டிரில்லியன் பொருளாதாரம் நோக்கி செயல்படுகிறோம். தற்போது போன்ற அரசியல் ஸ்திரத்தன்மை முன் எப்போதும் இருந்தது இல்லை.இந்தியாவின் வாங்கும் திறன், தேவை அதிகரித்துள்ளது.இந்தியாவில் திறமையான இளைஞர்கள் உள்ளனர்.நடுத்தர வர்க்கத்தினர் குறிக்கோள் உடையவர்களக உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி பெற்றுள்ளது. நகரங்களை நவீனப்படுத்தி வருகிறோம்.370 மில்லியன் மக்கள் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். தொழில் முனைவோராக மாற இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். எங்களிடம் சிறப்பான கொள்கைகள உள்ளன.வேகமான வளர்ச்சியை இந்தியா விரும்புகிறது. உங்களின் நோக்கமும், எங்களின் எதிர்பார்ப்பும் சரியாக பொருந்துகிறது.உங்களின் தொழில்நுட்பமும், எங்களது திறமையும் ஒத்து போகும்
இந்தியா முழுவதும் ஒரே வரி கட்டமைப்பில் வந்துள்ளது.இந்திய வர்த்தகத்தில் ஜிஎஸ்டிஒரு அங்கமாக மாறியுள்ளது. விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாம் அனைவரும் இணைந்து உலக பொருளாதாரத்தை முன்னேற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமநாதன் நாகப்பன் வெளிநாட்டு முதலீடு - மதம் முக்கியமில்லை. எண்ணெய் இறக்குமதி - மதம் முக்கியமில்லை.தேர்தல் பிரச்சாரம் - மதம் முக்கியம். இந்துக்களுக்கு ஆபத்து. howdy Modi உரை - இந்தியா வேற்றுமையில் ஒற்றுமைஅழகான சித்தாந்தம்.
Rate this:
Share this comment
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
26-செப்-201904:51:00 IST Report Abuse
Nepolian S கருமம்...இவர பார்த்து மத்த நாட்டுக்காரன் எல்லாம் சிரிப்பானுங்கோ
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
26-செப்-201912:52:35 IST Report Abuse
Chowkidar NandaIndiaபார்த்து பேசுப்பா. இதை கேட்டு மவுனகுருவிற்கு கோபம் வந்துவிடப்போகிறது. என்னை பார்த்து சிரித்தவர்கள் இன்னொருவரை பார்த்து சிரிப்பதா என்று கோபப்பட போகிறார்....
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
26-செப்-201902:30:15 IST Report Abuse
Rajesh இன்னும் கொஞ்ச நஞ்சம் இருக்குற நல்ல தண்ணீரை எல்லாம் மாசாக்கி, நிலங்களை மலடாக்கி, மனிதர்களை நோயின் பிறப்பிடமாக்கி எல்லாம் முடிந்துவிடும். அந்நிய செலாவணி வேண்டுமென்றால், சுயமாக தயாரித்து ஏற்றுமதி செய்யணும், அதா விட்டுவிட்டு வந்து நாட்டை பாழ் ஆக்கு என்று இரத்தின கம்பளம் போட்டு கூப்பிட்டால் என்ன கொடுமை? கோயில்ல மணிஅடிச்சா போதுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X