எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

டில்லியில் பங்களாக்களை பெற முடியாமல் தி.மு.க., -எம்.பி.,க்கள் திணறல்

Updated : செப் 26, 2019 | Added : செப் 25, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
டில்லி, பங்களா, தி.மு.க., எம்.பி., திணறல்

பழைய நினைப்பில் இருந்து கொண்டு, கோரிக்கை வைப்பதால், தாங்கள் எதிர்பார்க்கும் பங்களாக்களை பெற முடியாமல், தி.மு.க., மூத்த, எம்.பி.,க்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

எம்.பி.,க்களுக்கு வீடுகள் ஒதுக்கும் பார்லிமென்டின், 'ஹவுஸ் கமிட்டி'யில், தி.மு.க., - எம்.பி., கனிமொழியும், காங்கிரஸ், எம்.பி., மாணிக் தாக்கூரும் இடம் பெற்றவுடன், 'நம்ம ஆட்களாச்சே, கேட்டது கிடைத்துவிடும்' என, குஷியாகி, தமிழக, எம்.பி.,க்கள் இருவரையும் மொய்த்தனர்.

வாஸ்து, வசதி, ராசி என, பல காரணங்களை சொல்லி, விருப்பமான வீடுகள் கேட்டு, இருவரிடமும் மனுக்கள் அளித்தனர். பா.ஜ., கறார்ஆனால், கமிட்டி தலைவர், பா.ஜ.,வை சேர்ந்த, எம்.பி.,யான, சி.ஆர். பாட்டீல், சிபாரிசுகளை ஏற்க முடியாதென கறார் காட்டவே, எம்.பி.,க்கள் முகம் வாடியது. இதனால், ரூட்டை மாற்றிய, தி.மு.க., - எம்.பி.,க்கள், தங்களுக்கு தெரிந்த அதிகாரிகள், அமைச்சர்கள் மூலமாக, முயற்சிகளை தொடர்ந்தனர்; எதுவும் பலனளிக்கவில்லை.

இவர்கள் ஒன்று கேட்க, அரசு வேறு வீட்டை தர, பங்களா ஒதுக்கீடு ஒரே களேபரமாகி இருக்கிறது. இதில், தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் நிலைமை தான் பரிதாபம். தான் அமைச்சராக இருந்தபோது வசித்த ரெய்சினா சாலை பங்களாவே வேண்டுமென, டி.ஆர்.பாலு பிடிவாதமாக கேட்டும் தரப்படவில்லை.

தயாநிதி மாறனுக்கு, 'டூப்ளக்ஸ் மாடலில்' இரு தள வீடு தந்தும், அவருக்கும் பிடிக்கவில்லை. ராஜாவும், சில பங்களாக்களை கேட்டு, கிடைக்காமல் போகவே, அவர்கள் தந்த பங்களாவையே, ஏற்றுக் கொண்டுவிட்டார். இவர் ஒருவருக்கு மட்டுமே, வீடு ஒதுக்கீடு முடிவாகியுள்ளது.


பிரச்னை ஏன்?இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறிய தாவது:தி.மு.க., மூத்த, எம்.பி.,க் கள், தங்களை இன்னமும் அமைச்சர்களாகவே கருதிக் கொண்டு, அதே தோரணையிலேயே பங்களாக்களை கேட்பதால் தான் பிரச்னை வருகிறது. அமைச்சர்களுக்கான ஒதுக்கீட்டில், எம்.பி.,க் களுக்கு வீடுகளை தர இயலாது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
02-அக்-201912:41:23 IST Report Abuse
oce தமிழக எம்பிக்கள் பாராளுமன்றம் நடக்கும் போது தான் வருகை தர வேண்டும். அங்கு எதற்கு அவர்களுக்கு பங்களா வசதிகள்.
Rate this:
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
28-செப்-201917:50:26 IST Report Abuse
Tamilselvan திஹார் பங்களா தயாராக இருக்கிறது .விரைவில் வரலாம்.
Rate this:
Cancel
Soundar - Chennai,இந்தியா
27-செப்-201909:07:12 IST Report Abuse
Soundar Why do they need bungalow or apartments? What is the interest they have for the country? What is that they have done for the people? First of all they have to return the looted money to the public. They should be given sharing accommodation five in a single room
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X