பொது செய்தி

இந்தியா

நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காண குழு :இ.பி.எஸ் பினராயி பேச்சில் முடிவு

Updated : செப் 27, 2019 | Added : செப் 25, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
 நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காண குழு :இ.பி.எஸ்  பினராயி பேச்சில் முடிவு

தமிழகம் - கேரளா இடையிலான, நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காண, குழுக்கள் அமைக்க, இரு மாநில முதல்வர்கள் நடத்திய பேச்சில் முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் இடையே, நதி நீர் பங்கீடு தொடர்பாக, பிரச்னை இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காண, இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேச, முடிவு செய்தனர். அதன்படி, நேற்று கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சந்திப்பு நடந்தது.தமிழகம் தரப்பில், முதல்வர், இ.பி.எஸ்., உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி, துணை சபாநாயகர், ஜெயராமன், தலைமை செயலர், சண்முகம், முதல்வரின் முதன்மை செயலர், சாய்குமார், பொதுப்பணித் துறை செயலர், மணிவாசன் பங்கேற்றனர்.


பங்கேற்புகேரளா தரப்பில், அம்மாநில முதல்வர், பினராயி விஜயன், நீர்வளத் துறை அமைச்சர், கிருஷ்ணன்குட்டி, எரிசக்தி துறை அமைச்சர், மணி, வனத்துறை அமைச்சர், ராஜு, தலைமை செயலர், டாம்ஜோஷ் பங்கேற்றனர்.பேச்சுக்கு பின், கேரள முதல்வர், பினராயி விஜயன் கூறியதாவது:தமிழக முதல்வரின் முயற்சியால், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

தமிழகம் மற்றும் கேரள மக்கள், சகோதரர்களாக உள்ளனர். எனவே, எந்த பிரச்னையாக இருந்தாலும், பேசி தீர்வு காணும் நிலை உள்ளது. ஒவ்வொரு விவகாரத்திற்கும், தனித்தனியே முடிவு எடுக்கவில்லை. அனைத்து விஷயங்களிலும், என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கப் பட்டது. பரம்பிக் குளம் - ஆழியாறு திட்டத்திற்கு, ஒப்பந்தம் செய்து, 60 ஆண்டுகளாகி விட்டன. ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய, இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக, இரு மாநிலங்களிலும், தலா, ஐந்து பேர் குழு அமைக்கப்படும். ஆனைமலையாறு, நீராறு, நல்லாறு, மணக்கடவு குறித்தும், அந்தக் குழு பேச்சு நடத்தும்.மின்சாரம் முல்லை பெரியாறு விவகாரத்தில், மின்சாரம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் தொடர்பாக, மின் துறை அதிகாரிகள் குழு அமைக்கப்படும். இரு மாநில பிரச்னைகளுக்கு, விவாதம் செய்யாமல், தீர்வு எட்டப்படும். இந்த பேச்சு, நல்ல தொடக்கமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

முதல்வர், இ.பி.எஸ்., கூறியதாவது:

ஏற்கனவே ஆலோசித்தபடி, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில், நீர் பங்கீடு செய்வது குறித்து, இரு மாநிலங்களிலும், தலா, ஐந்து பேர் குழு அமைக்கப்படும். அந்த குழு ஆய்வின் அடிப்படை யில், திட்டம் நிறைவேற்றப்படும்.பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற, தனிக் குழு அமைக்கப்படும். அக்குழு ஆய்வு செய்த பின், அந்த திட்டமும் நிறைவேற்றப்படும். மேலும், ஆனைமலையாறு, நீராறு, நல்லாறு திட்டம், சிறுவாணி பிரச்னை போன்றவற்றுக்கும், இந்த குழு வழியே, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

முல்லை பெரியாறு அணை பிரச்னை குறித்து, ஆய்வு செய்து, தீர்வு காணப்படும். தமிழக விவசாயிகள், கேரள விவசாயிகள், சகோதரர்களாக உள்ளோம். இரு மாநிலங்களுக்கும், எந்த பிரச்னையும் இல்லாமல், நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.இரு மாநில விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும், தேவையான நீரை பங்கீட்டு கொள்ள, இந்த பேச்சு நடந்தது. எவ்வித பாகுபாடுமின்றி, இரு மாநில மக்களும் இணைந்து செயல்படும் சூழ்நிலை, தற்போது உருவாகி உள்ளது.சிறு சிறு பிரச்னைகளை பேசி தீர்க்க, முடிவு செய்யப் பட்டு உள்ளது.

முதல் கட்டமாக, இந்த பேச்சை துவக்கி உள்ளோம். இரு மாநில தலைமைச் செயலர்கள் தலைமையில், கமிட்டி அமைக்கப்படும். ஆண்டுக்கு இரு முறை, இரு மாநில தலைமைச் செயலர்கள் சந்தித்து பேசுவர்; விரைவாக, முடிவு எட்டப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
26-செப்-201918:37:07 IST Report Abuse
JSS உண்டி குலுக்கிகள் அரசுகள் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணாது. உதவாக்கரை கட்சி உதவாக்கரை அரசு.
Rate this:
Cancel
Sundar - Madurai,இந்தியா
26-செப்-201917:36:41 IST Report Abuse
Sundar Good efforts to solve the chronic problems among parties concerned instead of approaching Arbitrator and Courts to save time. It is appreciable.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
26-செப்-201916:45:39 IST Report Abuse
Endrum Indian குழு நியமிக்கப்படும் ?? பிறகு பேசுவார்கள்?பிறகு ரிப்போர்ட் கொடுக்கப்படும்?? முடிவு எடுக்கப்படும்??.....ஒண்ணு கூட நடக்காது வெறும் எதிர்கால வினையில் தான் உள்ளது. இது நான் இந்தியாவின் பிரதமமந்திரியாக ஆவேன் என்று சொல்வது போல உள்ளது. குழு நியமிக்கப்பட்டது. இன்னும் 15 நாளில் அறிக்கை , அதன் பிரகாரம் அன்றிலிருந்து 2 நாளில் முடிவு??எங்கே ஒரு தடவை இப்படி சொல்லிப்பாருங்கள் திராவிட அரசியல்வாதிகளே????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X