அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.நகர் பட்டுவாடா வழக்கு: ஆணையத்துக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

Updated : செப் 26, 2019 | Added : செப் 26, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
ஆர்.கே.நகர்,பட்டுவாடா,வழக்கு, ஸ்டாலின், வலியுறுத்தல்

சென்னை:'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப் பட்டுவாடா தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற, தலைமை தேர்தல் ஆணையரே, உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய், பட்டுவாடா செய்ய வைத்திருந்த பட்டியலை, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து, வருமான வரித்துறை கைப்பற்றியது.இது தொடர்பான, முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப் போவதில்லை என, அ.தி.மு.க., அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது, கண்டனத்துக்குரியது.

எனவே, பணப் பட்டுவாடா விவகாரத்தில், முறையாக புகார் அளிக்காத தேர்தல் அதிகாரி; பெயர்களே இல்லாமல், முதல் தகவல் அறிக்கை பதிவிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, முறையாக, இந்த வழக்கை கண்காணிக்காத, இணை போலீஸ் கமிஷனர், மேல்முறையீடு செய்யாத, மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் மீதும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும் என, தலைமை தேர்தல் ஆணையரே, உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தற்காலிக நீக்கம்



திமு.க., கொள்கை பரப்பு துணைச் செயலர், குமரன், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில், செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டு உள்ளது.


தேர்தல் பணி குழு: தி.மு.க., அறிவிப்பு



தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிக்கை:விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, தேர்தல் பணி பொறுப்புக் குழு தலைவராக, முன்னாள் அமைச்சர் பொன்முடி, செயலராக, எம்.பி., ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டு உள்ளனர். குழு உறுப்பினர்களாக, நான்கு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தேர்தல் பணி பொறுப்பாளர்களாக, முன்னாள் அமைச்சர்கள், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பரசன், ஆ.ராஜா உள்ளிட்ட பலர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கு, தேர்தல் பணி பொறுப்புக் குழு தலைவராக, முன்னாள் அமைச்சர், ஐ.பெரியசாமி; செயலராக, மகளிரணி செயலர் கனிமொழி நியமிக்கப்பட்டு உள்ளனர். குழு உறுப்பினர்களாக, 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
26-செப்-201921:18:15 IST Report Abuse
oce இருபது ரூவா டோக்கன் காரரை கண்டு பிடித்தீர்களா.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
26-செப்-201915:40:01 IST Report Abuse
Baskar ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடாவை பற்றி பேசும் நீ உன் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த பணத்தை ஒன்றுமே பேசவில்லை. அப்போ அதுவெல்லாம் உண்மையா . இதை வைத்து இவ்வளவு மோசடி பெற்ற வெற்றி தான் இந்த வெற்றியா. இது உனக்கு உனக்கு வெற்றி அல்ல தோல்வி தான். வருகிற தேர்தல் இரண்டிலும் டெபாசிட் காலி.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
26-செப்-201909:12:19 IST Report Abuse
தமிழ் மைந்தன் கட்சியின் கொள்கையை சொன்னவர் நீக்கமா?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X