பொது செய்தி

இந்தியா

இந்திய பணக்காரர்கள்; முதலிடத்தில் முகேஷ் அம்பானி

Updated : செப் 26, 2019 | Added : செப் 26, 2019 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி: இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 8வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.3.8 லட்சம் கோடி.


இதுதொடர்பாக ஐ.ஐ.எப்.எல் வெல்த் மற்றும் ஹூருன் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 3 லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். இவர் தொடர்ந்து 8வது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துள்ளார். இந்துஜா சகோதரர்கள் (ரூ.1.86 லட்சம் கோடி) 2வது இடத்திலும், விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி(ரூ.1.17 லட்சம் கோடி) 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அடுத்தடுத்த இடங்கள் முறையே, மிட்டல் நிறுவன தலைவர், லட்சுமி நாரயணன் மிட்டல்(ரூ.1.07 லட்சம் கோடி), அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி(ரூ.94,500 கோடி), உதய் கோடாக்(ரூ.94.100), பூனாவாலா (ரூ.88,800 கோடி), சைரஸ் மிஸ்திரி (ரூ.76,800 கோடி), ஷபூர் பலோன்ஜி (ரூ.76,800 கோடி), திலிப் சங்கவி (ரூ.71,500 கோடி) சொத்துக்களுடன் 'டாப் - 10' இடங்களை பிடித்துள்ளனர்.

1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கொண்டவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 831 ஆக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் அது 953 ஆக உயர்ந்துள்ளது. இப்பட்டியலில் முதல் 25 இடங்களில் உள்ளவர்களின் சொத்து மதிப்பு, நாட்டின் மொத்த ஜிடிபி.,யில்(உள்நாட்டு உற்பத்தி) 10 சதவீதமாக உள்ளது.

பட்டியலில் இடம்பிடித்துள்ள 152 பெண்களில், எச்.சி.எல்., இயக்குனர் ரோஷினி நாடார், இந்திய பணக்கார பெண்களில் முதலிடம் பிடித்துள்ளார். பட்டியலில் உள்ளவர்களில் 26 சதவீதம் பேர் மும்பையில் வசித்து வருகின்றனர். 82 பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathish - melbourne,ஆஸ்திரேலியா
26-செப்-201914:05:15 IST Report Abuse
sathish இவர் நூறு ஆண்டு இல்லை ஆயிரம் ஆண்டு வளமுடன் வாழ்ந்து நாட்டுக்கு ,மக்களுக்கு சேவை செய்ய கடவுளை வேண்டுகிறேன் , இவரால் இந்தியாவில் லட்சக்கணக்கான உயிர்களுக்கு சோறு போடுகிறார் ,இவரால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பிழைக்கின்றன வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
26-செப்-201913:38:41 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் காங்கிரஸ் ஆட்சியில் இவரை இந்தியாவின் முதல் பணக்காரர் ஆக்கி இருக்கிறார்கள் . காங்கிரஸ் ஒழிக.
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
26-செப்-201911:29:24 IST Report Abuse
suresh kumar ஆனால் இவர் நடத்தும் கம்பெனி நஷ்டத்தில் இவருக்கு கம்பெனி நடத்த கடன் கொடுத்த வங்கியில் பணம் போட்டு வைத்தவர்களுக்கு.....?
Rate this:
Share this comment
சீனி - Bangalore,இந்தியா
26-செப்-201912:51:45 IST Report Abuse
சீனிநஷ்ட்டதுல ஓடுறது தம்பி அனில் அம்பானியோடது....
Rate this:
Share this comment
26-செப்-201913:37:16 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்அதெல்லாம் எங்களுக்கு தெரியாது வார்டன்னா அடிப்போம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X