சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையிலும் 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம்?

Updated : செப் 26, 2019 | Added : செப் 26, 2019 | கருத்துகள் (41)
Advertisement

கோவை: தேனியை தொடர்ந்து கோவையிலும் 'நீட்' நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, மேலும் 2 மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி மருத்துவகல்லூரியில் படித்து வந்த உதித் சூர்யா என்பவர் சிக்கினார். இதையடுத்து அனைத்து மருத்துவகல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான ஆவணங்களை சரிபார்க்கும்படி மருத்துவகல்லூரி இயக்குனரகம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் கோவை பி.எஸ்.ஜி., மருத்துவகல்லூரியில் ஆவணங்களை சரிபார்க்கும் போது, இரண்டு மாணவர்களின் நீட் தேர்வு ஹால்டிக்கெட் போட்டோ மற்றும் சேர்க்கைக்கான போட்டோவில் மாற்றம் இருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மருத்துவகல்லூரி இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இதையடுத்து போட்டோவில் மாற்றம் உள்ள காஞ்சிபுரம் மற்றம் தருமபுரியை சேர்ந்த மாணவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது.


'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், ஒரு மாணவி, ஒரு மாணவன் சேர்ந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு, சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி புகார் கடிதம் அளித்துள்ளது. 'நீட்' நுழைவுத்தேர்வு புகைப்படத்திற்கும், அனுமதி கடித புகைப்படத்திற்கும் வித்தியாசம் உள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'நீட்' நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த உதித் சூர்யா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது எழுப்பப்பட்டுள்ள புகார், மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-201913:28:55 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நீட் தேர்வு இல்லையென்றால் இவன் சாதாரணமாக மருத்துவராகி இருப்பான் , பணம் செலவழிக்க இவன் அப்பா இருக்கிறார். டாக்டர் தொழிலில் தான் அள்ளியது போதாமல் தன் மகனையும் பணம் சமபாதிக்க டாக்டர் ஆக்க முயற்சித்திருக்கிறார். அந்த கல்லூரியிலும் ஒரு கூட்டமே இந்த மோசடிக்கு உடந்தை
Rate this:
Share this comment
Rajesh - Chennai,இந்தியா
26-செப்-201922:46:50 IST Report Abuse
Rajeshஇப்போ தெரியுது. முன்னெல்லாம் டாக்டர் பசங்க டாக்டரே படிப்பாங்க. எல்லாம் திருட்டுத்தனம் தான் போல.... இவர்கள் மீது கடும் குண்டர் சட்டம் போட்டு உள்ளே தள்ளவேண்டும்... தகுதியான ஒரு மாணவனுக்கு செல்ல வேண்டியதை இவர்கள் திருடுகிறார்கள். ஏழை மாணவர்கள் தகுதியிருந்தும் சீட்டு கிடைக்காமல் தற்கொலை செய்கிறார்கள், என்ன கொடுமை இது....
Rate this:
Share this comment
Cancel
thulakol - coimbatore,இந்தியா
26-செப்-201913:02:17 IST Report Abuse
thulakol இது தி மு க வின் சதி வேலையாக இருக்கும் ஏன் என்றல் அவர்கள் நீட் தேர்வினை ஒழிக்கவேண்டும் என்று தீவிரமாக உள்ளார்கள்
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
26-செப்-201912:46:35 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan இப்படி தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போக்குவரத்து ஊழியர்களை சோதித்தால் நிறைய பேர் மாட்டுவர்
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
26-செப்-201914:47:18 IST Report Abuse
THENNAVANஅய்யோக்கியர்கள் அயோக்கியர்களை அரியணை அமர்த்துவர் (தி மு க & சோனியா )...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X